ஒரு குழுவில் உள்ளவர்கள் வகுப்புகளின் இடைவேளையில் பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.
சில சிறுவர்கள் உணவு வகுப்பின் ஒரு பகுதியாக சாலட் தயாரிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்.
இசை வகுப்பின் போது கீதங்கள் பாடுவதன் அடிப்படைகளை அவர்கள் உன்னிப்பாகக் கேட்கிறார்கள்.
மாலை விளையாட்டுகள் புத்துணர்ச்சிக்கான நேரத்தை வழங்குகின்றன.
சிறுவர்கள் மாலையில் கூட்டு தியானத்திற்காக ஒன்று கூடினர்.
Tதியான அமர்வின் முடிவில் அவர்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தியை செய்கிறார்கள்.
பொது மக்கள் முன்பாக பேசுவது பற்றிய ஒரு வகுப்பு குழந்தைகளின் மேடை பயத்தை வெல்ல உதவுகிறது.
மற்றொரு வகுப்பில், டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதன் நன்மை தீமைகள் மற்றும் சாதகமான வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
ஸ்வாமி ஸ்மரணானந்தாவுடன் குழந்தைகள் உரையாடுகிறார்கள்.
ஸ்வாமி ஸ்வரூபானந்தா ஒரு சிறுவர் குழுவைச் சந்திக்கிறார்.
கயிறு இழுக்கும் போட்டி குழந்தைகளின் வலிமை மற்றும் கூட்டு முயற்சியின் சோதித்தலை வழங்குகிறது.
நிகழ்ச்சியின் நிறைவு நாள் குழந்தைகளுக்கான வேடிக்கையான செயல்பாடுகளால் நிரம்பியுள்ளது.
சிறுவர்கள் ஒரு வேடிக்கையான விளையாட்டை ரசிக்கிறார்கள்.
நிறைவு நாளன்று நடைபெறும் கலை நிகழ்ச்சியில் ஹார்மோனியம் மற்றும் கிட்டாருடன் குழந்தைகள் பக்திபூர்வ கீதங்களை பாடுகின்றனர்.
சிறுவர்களில் சிலர் சில யோகாசனங்களை செய்து காட்டுகின்றனர்.
குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையிலிருந்து எழுச்சியூட்டும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் குழந்தைகளால் நடத்தப்படுகிறது.
பரவசப்பட்ட பார்வையர்களான சன்னியாசிகள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது சிறுவர்கள் ஸ்வாமி சங்கரானந்தாவிடம் இருந்து பிரசாதம் பெற்றுக்கொள்கிறார்கள்.
முகாமில் பங்கேற்றவர்களின் புன்னகை முகங்களை ஒரு குரூப் ஃபோட்டோ பதிவு செய்கிறது.