பரமஹம்ஸ யோகானந்தரின் தியானமும் கிரியா யோகமும்

பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகம்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன் அல்லது இறைவனுடன் மீண்டும் ஐக்கியமாக்கும் அறிவியல் ஆகும். வழக்கமாகவும் ஆழமாகவும் தியானம் செய்வதன் மூலம், உங்கள் ஆன்மாவை—உங்களுடைய இருப்பின் அக ஆழ மையத்தில் உள்ள அமரத்துவ, பேரின்பமய தெய்வீக உணர்வுநிலையை—நீங்கள் விழித்தெழச் செய்வீர்கள். யோகத் தியானம் நமது ஆன்மாவின் எல்லையற்ற செயல்திறனைத் திறக்கும் நெடுங்காலமாக நிரூபிக்கப்பட்ட வழியாகும். அது ஒரு தெளிவற்ற மனதளவில் எண்ணும் அல்லது தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் செயல்முறையல்ல. அது வாழ்க்கையின் கவனச் சிதறல்களிலிருந்து கவனத்தை விடுவிக்கும் நேரடியான வழியாகும்; அது நமது மெய்யான பெரும் சுயத்தை—நாம் அற்புதமான தெய்வீக இருப்பாக நாம் மெய்யாகவே இருப்பதை—அறிவதிலிருந்து நம்மைத் தடுக்கும் கொந்தளிக்கின்ற மற்றும் அமைதியற்ற எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது. தியான ஒழுக்கத்தின் வாயிலாக, நாம் அகத்தே ஒருமுகப்படக் கற்றுக் கொள்கிறோம்; அதன் மூலம் நமது அசைக்க முடியாத அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் மையத்தைக் கண்டுபிடிக்கிறோம்.

நீங்கள் தியானத்தில் முன்னேறும் போது, படிப்படியாக நீங்கள் ஆன்மாவிலிருந்து வரும் ஓர் என்றும்-பெருகும் அக அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறீர்கள். மிக உயர்ந்த நிலைகளில், உங்களுடைய ஆன்மா இறைவனுடனான முழுமையான ஐக்கியத்தை உணர்ந்தறிகிறது. இதுதான் தியானத்தின் இலக்கு—பரவசமான, உயர்-உணர்வான, பேரின்பமிகு தெய்வீகத் தோழமை; அது சமாதி என்றழைக்கப்படுகிறது.

தியானத்தின் மிக உயர்ந்த உத்திகளைக் கற்றுப் பயன்பெற விரும்பும் எவரும் இந்தப் பாடங்கள் ஒரு விலைமதிப்பற்ற ஆதாரமாகவும் வாழ்நாள் முழுவதற்குமான துணையாகவும் இருக்கக் காண்பார்.

பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோக. அறிவியலின் ஒரு பகுதியாக சக்திவாய்ந்த தியான உத்திகளின் ஒரு அமைப்பைப் போதித்தார். இந்த உத்திகள் யோகதா சத்சங்கப் பாடங்கள் வாயிலாகக் கிடைக்கின்றன.

நீங்கள் யோகதா சத்சங்கப் பாடங்களுக்காகப் பதிவு செய்திருக்கவில்லை என்றால், நீங்கள் இந்தப் பக்கங்களில்  தியானம் செய்வது எப்படி என்பதன் மீதான சில அடிப்படை அறிவுறுத்தல்களை, க் காண்பீர்கள், அதை உடனடியாகப் பயன்படுத்தி தியானம் கொண்டுவரும் அமைதியையும் தெய்வீக உணர்வுநிலையையும் உங்களால் அனுபவிக்கத் துவங்க முடியும்.

தியானத்தின் பலன்கள்

தியானத்தின் பலன்கள் பல. வழக்கமான பயிற்சியின் வாயிலாக, நுட்பமான உருமாற்றங்கள் ஒருவருடைய உடலில், மனத்தில் மற்றும் உள்ளார்ந்த உணர்வு நிலையில் நிகழ்கின்றன. இந்தப் பலன்களில் சில உடனடியாக கிடைக்கின்றன: மற்றவை படிப்படியாக மலர்கின்றன மற்றும் வெளிப்படையாகத் தோற்றமளிக்க அதிக காலம் எடுக்கக்கூடும்.

இந்தப் பலன்கள் நேர்மையான முயற்சியுடனும் ஒருவர் வாழ்வில் இறுதி இலக்கை—ஆன்ம-அனுபூதியின் வாயிலாகக் கிடைக்கும் என்றும்-புதிய பேரின்பத்தையும் இறைவனுடனான ஐக்கியத்தையும்—காணும் வரை தொடர்ந்து கடுமுயற்சி செய்ய இச்சாசக்தியைத் தயார் செய்வதன் மூலமும் வருகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து:

“உங்களால் தியானம் செய்வதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்ய முடிகின்ற போதிலும், சிந்தனைகள் அமைதியாகி உங்கள் மனம் இறைவனின் அமைதிக்கு சுருதி சேர்க்கப்படும் போது வரும் ஆனந்தத்திற்குச் சமமானதை நீங்கள் ஒருபோதும் காண மாட்டீர்கள்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
யோகதா சத்சங்கப் பாடங்கள்

குளத்தில் லில்லி

தியானம் ஆன்ம-அனுபூதி அறிவியல் ஆகும். அது உலகில் மிகவும் நடைமுறைக்கேற்ற அறிவியல் ஆகும். தியானத்தின் மதிப்பைப் புரிந்துகொண்டு அதன் பயனுள்ள விளைவுகளை அனுபவித்தார்கள் என்றால், பெரும்பாலானோர் தியானம் செய்ய விரும்புவார்கள். தியானத்தின் இறுதி நோக்கம் இறைவனைப் பற்றிய உணர்வுப்பூர்வமான விழிப்புணர்வையும் அவனுடனான ஆன்மாவின் நிலைபேறுடைய ஐக்கியத்தையும் அடைவதாகும். வரையறைக்குட்பட்ட மனிதத் திறன்களை மாபெறும் படைப்பாளியின் சர்வவியாபகத்துடனும் சர்வ வல்லமையுடனும் இணைத்துப் பயன்படுத்துவதை விட அதிகமான செயல்நோக்கமும் பயனும் கொண்டதாக இருக்கும் சாதனையாக எது இருக்கமுடியும்? இறை-அனுபூதி தியானம் செய்பவரின் மீது எம்பெருமானின் அமைதி, அன்பு, ஆனந்தம், ஆற்றல், ஞானம் ஆகியவற்றின் அருளாசிகளைப் பொழிகிறது.

தியானம் ஒருமுகப்பாட்டை அதன் மிக உயர்ந்த வடிவத்தில் பயன்படுத்துகிறது. ஒருமுகப்பாடு கவனத்தை கவனச் சிதறல்களிலிருந்து விடுவித்து ஒருவர் விரும்பும் எந்த எண்ணத்தின் மீதும் குவிப்பதை உள்ளடக்கியது. ஒருமுகப்பாட்டின் எந்த வடிவத்தில் கவனம் அமைதியின்மையிலிருந்து விடுபட்டிருந்து இறைவன் மீது குவிக்கப்படுகிறதோ அந்த விசேஷமான வடிவமே தியானம் ஆகும். ஆகவே, தியானம் இறைவனை அறியப் பயன்படுத்தப்படும் ஒருமுகப்பாடு ஆகும்…

இறைவனுடைய இருப்பின் முதற்சான்று விளக்கமுடியாத அமைதியாகும். இது மனிதனால் நினைத்துப் பார்க்கமுடியாத ஆனந்தமாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் உண்மை, வாழ்க்கை ஆகியவற்றின் பேராதாரத்தை ஒருமுறை தொட்டுவிட்டால், இயற்கை முழுவதும் உங்களுக்கு மறுமொழியளிக்கும்.

lillies on pond, Natureதியானம் ஆன்ம-அனுபூதி அறிவியல் ஆகும். அது உலகில் மிகவும் நடைமுறைக்கேற்ற அறிவியல் ஆகும். தியானத்தின் மதிப்பைப் புரிந்துகொண்டு அதன் பயனுள்ள விளைவுகளை அனுபவித்தார்கள் என்றால், பெரும்பாலானோர் தியானம் செய்ய விரும்புவார்கள். தியானத்தின் இறுதி நோக்கம் இறைவனைப் பற்றிய உணர்வுப்பூர்வமான விழிப்புணர்வையும் அவனுடனான ஆன்மாவின் நிலைபேறுடைய ஐக்கியத்தையும் அடைவதாகும். வரையறைக்குட்பட்ட மனிதத் திறன்களை மாபெறும் படைப்பாளியின் சர்வவியாபகத்துடனும் சர்வவல்லமையுடனும் இணைத்துப் பயன்படுத்துவதைவிட அதிகமான செயல்நோக்கமும் பயனும் கொண்டதாக இருக்கும் சாதனையாக எது இருக்கமுடியும்? இறை-அனுபூதி தியானம் செய்பவரின் மீது எம்பெருமானின் அமைதி, அன்பு, ஆனந்தம், ஆற்றல், ஞானம் ஆகியவற்றின் அருளாசிகளைப் பொழிகிறது.

தியானம் ஒருமுகப்பாட்டை அதன் மிக உயர்ந்த வடிவத்தில் பயன்படுத்துகிறது. ஒருமுகப்பாடு கவனத்தை கவனச் சிதறல்களிலிருந்து விடுவித்து ஒருவர் விரும்பும் எந்த எண்ணத்தின் மீதும் குவிப்பதை உள்ளடக்கியது. ஒருமுகப்பாட்டின் எந்த வடிவத்தில் கவனம் அமைதியின்மையிலிருந்து விடுபட்டிருந்து இறைவன் மீது குவிக்கப்படுகிறதோ அந்த விசேஷமான வடிவமே தியானம் ஆகும். ஆகவே, தியானம் இறைவனை அறியப் பயன்படுத்தப்படும் ஒருமுகப்பாடு ஆகும்…

இறைவனுடைய இருப்பின் முதற்சான்று விளக்கமுடியாத அமைதியாகும். இது மனிதனால் நினைத்துப்பார்க்க முடியாத ஆனந்தமாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் உண்மை, வாழ்க்கை ஆகியவற்றின் பேராதாரத்தை ஒருமுறை தொட்டுவிட்டால், இயற்கை முழுவதும் உங்களுக்கு மறுமொழியளிக்கும்.

“இறைவனை அகத்தே கண்டதும், நீங்கள் அவனைப் புறத்தே, எல்லா மக்களிலும் மற்றும் எல்லா நிலைமைகளிலும் காண்பீர்கள்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்,
பரதத்துவ தியானங்கள்

இதைப் பகிர