குரு-சிஷ்ய உறவு

இறைவனில் உங்களுடைய ஆனந்தத்தைத் தவிர வேறு எதையும் நான் உங்களிடம் நாடுவதில்லை. அதோடு நீங்களும் என்னிடம் நாடுவது இறைவனது ஞானம் மற்றும் ஆனந்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர் ஜகத் குரு

குரு: “இருளை நீக்குபவர்”

ஒரு உண்மையான குரு ஒரு சாதாரண ஆன்மீக ஆசான் அல்ல, ஆனால் எல்லையற்ற பரம்பொருளுடனான ஐக்கியத்தை அடைந்ததனால், அதே பேரின்ப இலக்கை நோக்கி மற்றவர்களை வழிநடத்த தகுதியுடையவராக இருப்பவர்.
 
சமஸ்கிருத சாத்திரங்கள் குருவை “இருளை விரட்டுபவர்”(கு, “இருள்” மற்றும் ரு, “விரட்டுபவர்”) என்று விவரிக்கின்றன. குருவின் பிரபஞ்ச உணர்வுநிலை ஒளியின் மூலம், அறியாமை இருள் அகற்றப்படுகிறது- நாம் ஒவ்வொருவரும், “இறைவனின் பிரதிபிம்பமாக” படைக்கப்பட்ட அழிவற்ற தெய்வீக ஜீவன்கள் என்பதைப் புரிந்துகொள்வதைத் தடுக்கின்ற ஒன்றை அகற்றுகிறோம்.
 
ஒரு உண்மையான குரு தனது சீடர்களை ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நெறிமுறை வழியாக அல்லது தியான உத்திகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கான விதிமுறைகளை உள்ளடக்கிய பயிற்சி வழியாக வழிநடத்துகிறார். குருவின் போதனைகளை கற்று செயல்படுத்துவதன் மூலம், ஊக்கமிக்க ஆன்மீக ஆர்வலர், ஆன்ம அனுபூதி அடைந்த குரு வெளிப்படுத்தும் இறைவனின் பேரொளி மற்றும் பேரன்பிற்கும், தனக்கும் இடையிலான உண்மையான உறவை புரிந்துகொள்கிறார். சீடர் ஆன்மீக வளர்ச்சியில் மேம்படும்போது, இறைவனின் தூதராகவோ அல்லது கருவியாகவோ, குருவானவர் தனிப்பட்ட முறையில் தமக்கு வழங்கும் இந்த அருளாசிகளை உணர்கிறார்.
 
கிரியா யோகப் பாதையின் அபரிமிதமான அருள் பொழிவானது போதனைகள் மூலம் மட்டுமல்லாமல், எல்லையற்ற பரம்பொருளை அறிந்த, அதே ஆன்மீக விழிப்புணர்வுக்கு மற்றவர்களையும் அழைத்துச் செல்லக்கூடிய, பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது குரு பரம்பரையின் உணரக்கூடிய இருப்பு மற்றும் வழிகாட்டுதலின் மூலம் சீடரின் வாழ்க்கையில் பாய்கிறது.

குருவுக்கும் சீடருக்கும் இடையிலான பிணைப்பு

பரமஹம்ஸ யோகானந்தர் குரு-சிஷ்ய உறவை “மிகவும் தனிப்பட்ட மற்றும் பிரத்தியேக ஆன்மீக பிணைப்பு… சீடனின் விசுவாசமான ஆன்மீக முயற்சி மற்றும் குரு வழங்கும் தெய்வீக அருளாசிகளின் ஒருங்கிணைப்பு.” என்று விவரித்தார்.

சீடன் குருவிடம் தனது விசுவாசத்தை உறுதி செய்வதன் மூலம் குருவின் விசுவாசத்தை பிரதிபலிக்கிறார். YSS பாட மாணவராகும் ஒருவர் வெளிப்படையாகவோ அல்லது உள்முகமாகவோ அத்தகைய உறுதிமொழியை அளிக்க வேண்டிய அவசியமில்லை. பரமஹம்ஸர் சக்திவாய்ந்த தியான உத்திகள் பற்றிய அறிவை, அவற்றைக் கற்றுக் கொள்ள மனப்பூர்வமாக விரும்பும் மற்றும் அதை இரகசியமாக வைத்திருக்க உறுதியளிக்கும் எவருக்கும் – அவர்களின் சமயம் அல்லது நடைமுறைகளைப் பொருட்படுத்தாமல் – சுதந்திரமாக வழங்கினார்.

இருப்பினும், கிரியா யோக விஞ்ஞானத்தை இறைவனை அடைவதற்கான தனிப்பட்ட பாதையாக உணர்பவர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோக தீட்சை வழங்கினார். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மூலம் வழங்கப்படும் புனித தீட்சை (சமஸ்கிருதத்தில் தீக்ஷா) பாட மாணவருக்கும் பரமஹம்ஸ யோகானந்தாவிற்கும் இடையிலான குரு-சிஷ்ய உறவை நிறுவுகிறது.

ஒரு உண்மையான குரு, ஸ்தூல வடிவில் இல்லாவிடினும், என்றென்றும் வாழ்பவராயிருக்கிறார். இறைவனின் சர்வ வல்லமையுடனும், சர்வ ஞானத்துடனுமான தனது ஒன்றிய தன்மையின் மூலம், ஒரு உண்மையான குரு எப்போதும் சீடனைப் பற்றி அறிந்திருக்கிறார், மேலும் நிலையான அன்புடனும் பாதுகாப்புடனும் அவரை கண்காணிக்கிறார்.

பரமஹம்ஸ யோகானந்தர் - YSS குரு பரம்பரையில் கடைசி குரு

பரமஹம்ஸ யோகானந்தர், தமது மறைவிற்கு முன், தான் YSS/SRF குரு பரம்பரையின் கடைசி குரு என்பது இறைவனின் விருப்பம் என்று கூறினார். அவரது சொஸைடி இல் அடுத்தடுத்து வரும் எந்த ஒரு சீடரோ அல்லது தலைவரோ ஒருபோதும் குரு என்ற பட்டத்தை ஏற்க மாட்டார்கள். இந்த தெய்வீக ஏற்பாடு சமய வரலாற்றில் தனித்துவமானது அல்ல. இந்தியாவில் சீக்கிய மதத்தை ஸ்தாபித்த மாபெரும் மகான் குருநானக்கின் மறைவுக்குப் பிறகு, வழக்கமான முறையில் அடுத்தடுத்த குருமார்கள் வந்தனர். அந்த வரிசையில் பத்தாவது குரு, அவர் அந்த குரு பரம்பரையில் இறுதி வாரிசாக இருக்க வேண்டும் என்றும், இனிமேல் போதனைகள்தான் குருவாக கருதப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.

பரமஹம்ஸர், தன் மறைவிற்குப் பிறகு, தான் நிறுவிய சொஸைடிகளான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மூலம் தொடர்ந்து பணியாற்றப் போவதாக உறுதியளித்தார். அவர் கூறினார், “நான் சென்ற பின்னர் போதனைகளே குருவாக இருக்கும்…. போதனைகளின் வாயிலாக நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய குருமகான்களுடனும் ஒத்திசைந்து இருப்பீர்கள்.”

மேலும் படிக்க

இதைப் பகிர