குருபூர்ணிமா வேண்டுகோள் — 2024

18 ஜூலை, 2024

“குரு என்பவர், சீடரில் உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை விழித்தெழச் செய்யும், விழிப்புணர்வடைந்த இறைவன் ஆவார்….குருவே எல்லா மனிதர்களிலும் உள்ள கொடையாளிகளில் ஆகச் சிறந்தவர். இறைவனைப் போலவே, அவருடைய பெருந்தகைமைக்கும் எல்லையே இல்லை.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

அன்பார்ந்த தெய்வீக ஆத்மனே,

இந்தியாவின் குருதேவர் ஆசிரமங்களில் இருந்து அன்பான வாழ்த்துக்கள்! குரு பூர்ணிமா புனித நாள் (ஜூலை 21) நெருங்கி வரும் இச்சமயத்தில், நமது இதயங்கள் குருதேவர் மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) வின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மற்றும் YSS குரு பரம்பரை குருமார்களுக்கு ஆத்ம அஞ்சலி செலுத்துகின்றன. மாயையால் பிணைக்கப்பட்ட மனித இயல்பிலிருந்து நம்மை இறைவனில் எல்லையற்ற சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய, முக்தியடைந்த ஆன்மாவான குருவிடம் ஈர்க்கப்படுவதை விட ஆன்மீகப் பாதையில் உயர்ந்த பரிசு எதுவும் இல்லை.

குரு தங்களுக்கு வழங்கிய ஆன்மீக செல்வங்களுக்கான நன்றியுணார்வுடனும், தங்கள் பக்தியை வெளிப்படுத்தவும், யோகதா பக்தர்கள் இந்தியாவில், வாகனமாகவும் பரமஹம்ஸரின் போதனைகள் மற்றும் பாரம்பரியத்தின் வடிவமாகவும் இருக்கும் YSS பணிகளுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளைத் தேடி அடிக்கடி எங்களை அணுகுகிறார்கள். கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்களை நிறைவு செய்வதற்கு பக்தர்களின் நிதி உதவி தேவைப்படும் இதுபோன்ற பல வாய்ப்புகளை இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்:

  • YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில் வளாகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் விருந்தினர் வசதிகளை மேம்படுத்துதல்
  • YSS இன் விரைவான வளர்ச்சியை எதிர்கொள்ள திறமையான பக்தர்களை பணிக்கு அமர்த்துதல்
  • YSS ராஞ்சி ஆசிரமத்தில் புனரமைப்பு பணிகள்

இந்த திட்டங்களின் மதிப்பீடு ₹10 கோடி ஆகும்.

பிரதான விருந்தினர் மாளிகையில் ஒரு தயாரான அறையின் காட்சி, ராஞ்சி
தக்ஷினேஷ்வர் ஆசிரமத்தில் புதுப்பிக்கப்பட்ட சமையலறை

நமது ஆசிரம வசதிகளை நவீன தரத்திற்கு மேம்படுத்தும் அதே வேளையில், YSS ஆசிரமங்களின் தனிச்சிறப்பான ஆன்மீகச் சூழலைப் பாதுகாக்க நாங்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளோம், இதனால் பக்தர்கள் கடந்த காலத்தைப் போலவே அதே உன்னத அனுபவத்தை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்கிறோம். நமது ஆசிரமங்களுக்கு வருகை தந்து, இந்த புதிய வசதிகளைப் பயன்படுத்தி, இறைத் தொடர்பு மற்றும் ஆன்மீக ஆய்வில் நேரத்தை செலவழிக்க உங்களை வரவேற்கிறோம், இதனால் இந்த புனிதமான சூழலில் உங்களை புதுப்பித்து, புத்துணர்ச்சியடையச் செய்யுங்கள்.

ஆடிட்டோரியம் புதுப்பிக்கும் காட்சி
YSS தக்ஷினேஸ்வர் ஆசிரமத்தில் புதுப்பிக்கப்பட்ட விருந்தினர் மாளிகை

ஆன்மீகப் புதுப்பித்தலுக்காக ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் இந்த புனித இடங்களை உருவாக்க அல்லது புதுப்பிக்க – நிதி பங்களிப்புகள், சேவை அல்லது பிரார்த்தனைகள் மூலமான உங்கள் உதவிக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் குருஜியின் உலகளாவிய குடும்பத்தின் ஒரு பகுதியாக, இறை நாடலில் ஒன்றுபட்டிருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், “இந்த பணியில் ஆர்வமுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் என் கவனிப்பில் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். என் தனிப்பட்ட அன்பின் பாதுகாப்பில் உங்களை வைத்துள்ளேன். இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் தொடர என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.” என்று கூறினார்.

இந்த குரு பூர்ணிமா நன்னாளில் குருதேவரின் இறை அன்பின் பேரொளி உங்கள் வாழ்க்கையை பெருமளவில் நிரப்பட்டும். ஜெய் குரு!

தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

முழு வேண்டுகோளைப் படிக்க:

புனித கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த தூய ஆசிரமம் குருஜியின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக சரணாலயமாக மாறியுள்ளது. தினமும் இங்கு ஆறுதல் நாடிவரும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அருகிலுள்ள நிலத்தை கையகப்படுத்துவதன் மூலமும், நவீன தரத்திற்கு ஏற்ப எங்கள் விருந்தினர் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் வளாகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

விருந்தினர் தங்குமிடத்தை மேம்படுத்துதல்: விருந்தினர் மாளிகையின் அனைத்து அறைகளும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, இப்போது புத்தம் புதிய படுக்கைகள், மெத்தைகள், திரைச்சீலைகள், கம்பளங்கள், குளியலறை பொருத்துதல்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளன. கோடைக்காலங்களில் கூட வசதியாக இருக்கும் வகையில் அறைகளில் ஏர் கண்டிஷனிங் வசதி செய்யப்பட்டுள்ளது. விருந்தினர் மாளிகையின் தாழ்வாரங்கள் புதிய டைல்ஸ் பதிப்பிக்கப்பட்டு, முழு கட்டிடமும் மீண்டும் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

சமையலறை மற்றும் உணவறை வசதிகளை நவீனமயமாக்குதல்: சுத்தமான மற்றும் திறமையான பணிச்சூழலை உருவாக்க சிறந்த வடிவமைப்பு, புதிய அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் பிரகாசமான விளக்குகளுடன் மத்திய சமையலறை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்கள், ஆசிரமத்தில் தங்கியிருந்து ஞாயிற்றுக்கிழமை சத்சங்கங்களில் கலந்து கொள்ளும் அல்லது வாரம் முழுவதும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உணவு அறை இரண்டு தளங்களாக விரிவுபடுத்தப்பட்டு, புதிய மேசைகள் மற்றும் நாற்காலிகளுடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பல பாராட்டு சான்றுகளை அனுப்பி வருகின்றனர். அவற்றில் இரண்டு இங்கே:

“நான் (சமீபத்தில்) தக்ஷிணேஸ்வரத்தில் இருந்தேன். ஆசிரமத்திற்குள் நுழையும்போதே அந்த அமைதி உணரக்கூடியதாக இருந்தது… தங்குமிடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது. புதிதாக நிறுவப்பட்ட சமையலறை மாசற்றதாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருந்தது. அமைதியான சூழல் மற்றும் குறைபாடற்ற விருந்தோம்பல் எனது வருகையை உண்மையிலேயே வளப்படுத்தியது.”​ — எஸ்.சி., உ.பி.

“விருந்தினர் மாளிகையில் புதுப்பிக்கப்பட்ட அறைகள் மிகவும் வசதியாகவும் இரசனையுடனும் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தின் கடும் வெப்ப சமயத்தில் தக்ஷிணேஸ்வரத்தில் இருந்தேன். அற்புதமாக தியானம் செய்ய முடிந்தது. குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு நன்றி – நான் வெப்பத்தை உணரவில்லை.” — எச்.கே., டபிள்யூ.பி.​

புனித வளாகத்தை விரிவுபடுத்துதல்: ஞாயிற்றுக்கிழமை சத்சங்கங்கள், சிறப்பு நினைவுகூரல்கள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஏராளமான பக்தர்களுக்கு இடமளிக்க தற்போதைய தியான மண்டபம் மிகவும் சிறியது. ஒரு தற்காலிக தீர்வாக, பிரதான கட்டிடத்தின் வராண்டாவை குளிர்சாதன வசதி நிறுவுவதன் மூலமும், திறந்தவெளிகளை கனமான நீல நிற திரைச்சீலைகளால் மூடுவதன் மூலமும் தியான மண்டபமாக மாற்றியுள்ளோம். இந்த முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, இந்த ஏற்பாடு போதுமானதாக இல்லை என்று அறிகிறோம்.

வளர்ந்து வரும் பக்தர்கள் கூட்டதிற்கு இடமளிக்க ஒரு பெரிய தியான மண்டபம் அவசரமாகத் தேவைப்படுகின்றது.
இறைவன் மற்றும் குருதேவரின் அருளால், தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள இரண்டு துண்டு நிலம் (ஆசிரமத்தின் விருந்தினர் மாளிகைக்கு வடக்கே) விற்பனைக்கு கிடைத்தது, அவை இப்போது YSS வாங்கியுள்ளது. இந்த வரவின் மூலம், YSS தனது வசதிகளை விரிவுபடுத்தவும், தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திற்கு வருகை தரும் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடமளிக்க, ஒரு பெரிய தியான மண்டபத்தை உருவாக்கவும் உதவும்.

நன்கொடை அளிக்க

கடந்த சில ஆண்டுகளில், YSS புதிய மாணவர் சேர்க்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது குருதேவரின் போதனைகளின் நீடித்த ஈர்ப்பிற்கு ஒரு சான்றாகும். கூடுதலாக, தற்போதைய டிஜிட்டல் யுகம் நிதி, புத்தகங்கள் மற்றும் பாடங்கள் விநியோகம், பக்தர் கடிதப் போக்குவரத்து, வலை வடிவமைப்பு மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல பணிப் பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கவும் தானியக்கமாக்கவும் நம்மை கட்டாயப்படுத்துகிறது. நம் விரிவடைந்து வரும் பக்த குடும்பத்திற்கு திறம்பட சேவை செய்வதற்கும், நம்மைச் சுற்றியுள்ள வேகமாக மாறிவரும் உலகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும், பல புதுமையான டிஜிட்டல் தளங்களை நாம் வழங்குகிறோம், இது வாழ்க்கையை மாற்றும் குருதேவரின் போதனைகளை அணுகுவதையும் பயனடைவதையும் அனைவருக்கும் எளிதாக்குகிறது.

இந்த வளர்ச்சியுடன், அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் இணக்கத் தேவைகள் அதிகரித்துள்ளன. ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துவது, சொற்பொழிவுகளை வழங்குவது, ஆலோசனைகளை வழங்குவது ஆகியவற்றில் முதன்மையாக கவனம் செலுத்தும் நமது சன்னியாசிகள், இந்த வளர்ந்து வரும் செயல்பாட்டுக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வது சவாலானதாகக் கருதுகின்றனர்.

இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் உறுப்பினர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த நம் சன்னியாசிகளை விடுவிப்பதற்கும், YSS சமீபத்தில் நம் பக்த சமூகத்திலிருந்து பல திறமையான நிபுணர்களை நியமித்துள்ளது. பல்வேறு துறைகளில் பணிபுரியும் இந்த அர்ப்பணிப்புள்ள நபர்கள் பின்வருமாறு:

  • தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்: குருதேவரின் போதனைகளின் டிஜிட்டல் முறையில் பரப்புவதில் முன்னிலை வகிக்கிறார்கள்
  • மருத்துவர்கள்: நம் அறப்பணி மருந்தகங்களில் சேவை செய்கிறார்கள்
  • சார்டர்ட் அக்கௌன்டன்ஸ்: நம் நிதி நேர்மை மற்றும் இணக்கத்தை உறுதி செய்தல்
  • நிறுவன மேம்பாட்டு நிபுணர்கள்: நம் உள் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நெறிப்படுத்துதல்
  • பிற அத்தியாவசிய ஊழியர்கள்: பல்வேறு முக்கியமான செயல்பாடுகளுக்கு உதவுதல்

ஒரு நல்வாய்ப்பாக, இந்த பக்தர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், குருதேவரின் சித்தம் அவர்களின் பணியிலும் பிரதிபலிக்குமாறு இருக்கிறார்கள். நமது பணியின் திறனை விரிவுபடுத்தும் அதே வேளையில், நமது பணியின் சாரத்தை பேணுவதை இதனால் உறுதிசெய்ய முடிகிறது.

கூடுதலாக, சமீபத்திய அரசாங்க அறிவிப்புகள் தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள் மற்றும் பிற ஊழியர்கள் போன்ற தனித்திறமை தேவையற்ற மற்றும் அரைத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை கணிசமாக உயர்த்தியுள்ளன. இந்த மாற்றங்கள், தொழில்முறை பணியமர்த்தலுக்கான நம் தேவையுடன் இணைந்து, நம் வருடாந்திர சம்பளக் கட்டணத்தை ₹ 2 கோடி அதிகரிக்கச் செய்துள்ளது.

நன்கொடை அளிக்க

ஆன்மீக வளர்ச்சி மற்றும் புத்துணர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ராஞ்சி ஆசிரமத்தில் தொடங்கப்பட்டுள்ள பல குறிப்பிடத்தக்க சீரமைப்பு திட்டங்கள் பற்றிய செய்திகளை ஜன்மோத்ஸவத்தின் போது எங்கள் முந்தைய செய்திமடலில் பகிர்ந்து கொண்டோம். இந்த முன்முயற்சிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்:

  • விருந்தினர் மாளிகை மேம்பாடு: பிரதான விருந்தினர் மாளிகை மற்றும் லேடிஸ் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய இரண்டிற்கும் இறுதி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் இந்த வசதிகள் அக்டோபர் 2024 க்குள் முழுமையாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த புனரமைப்புகளில் தங்குமிடங்களை தனிநபர் / குடும்ப அறைகளாக மாற்றுதல், கட்டமைப்பு சேதங்களை சரிசெய்தல் மற்றும் நம் தங்குமிட திறனை அதிகரிக்க லேடிஸ் கெஸ்ட் ஹவுஸுக்கு ஒரு மாடி சேர்ப்பது ஆகியவை அடங்கும்
  • ஆடிட்டோரியம் புதுப்பித்தல்: 1,100 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியத்தின் பணிகள் குறிப்பிடத்தக்க வேகத்தில் நடைபெற்று வருகின்றன. 2025 ஜனவரி மாத தொடக்கத்தில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான புனரமைப்பில் கூரையை புதிய வெப்ப- இன்சுலேடிங் தாள்களுடன் மீண்டும் கட்டியெழுப்புதல், அதிநவீன ஆடியோ-வீடியோ உபகரணங்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

துணை திட்டங்கள்: மேற்கண்ட திட்டங்களுடன், ஆசிரமத்திற்குள் பல பழைய கட்டமைப்புகளை புதுப்பித்துள்ளோம். அவற்றில் பின்வருவன அடங்கும்:

  • மைதானத்தில் உள்ள பழைய சாவடிகள் (சங்கங்களின் போது வரவேற்பு மற்றும் பதிவுக்கு பயன்படுத்தப்படுகின்றன)
  • ஆடிட்டோரியம் அருகே கழிப்பறை தொகுதி
  • பணியாளர் குடியிருப்புகள் மற்றும் ஸ்டோரேஜ் பகுதிகள்

புதுப்பிக்கப்பட்ட ஆடிட்டோரியம் மற்றும் கூடுதல் விருந்தினர் அறைகள் காரணமாக நம் மின்சாரத் திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது, இது ஒரு புதிய 50 KW மின்மாற்றி மற்றும் 125 KVA DG செட் நிறுவப்படுவதற்கு வழிவகுக்கிறது.

நிதி பற்றிய கண்ணோட்டம் மற்றும் எதிர்கால தேவைகள்: ராஞ்சி ஆசிரமத்தில் இந்த சீரமைப்புப் பணிகளுக்காக உங்கள் பெருந்தன்மையின் மூலம் நாங்கள் குறிப்பிடத்தக்க நன்கொடைகளைப் பெற்றுள்ளோம். இந்த முக்கியமான சீரமைப்புப் பணிகளை முடிக்க கூடுதலாக ₹ 4 கோடி தேவைப்படுகிறது. உங்கள் தொடர் ஆதரவுக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உங்களை வரவேற்க ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

குருதேவரின் பணிக்கான உங்கள் அசைக்க முடியாத ஆதரவையும் அர்ப்பணிப்பையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். உங்கள் உதவியுடன், ராஞ்சி மற்றும் தக்ஷினேஸ்வர் ஆசிரமங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்த தேவையான ₹ 10 கோடியைப் பெறுவோம் என்றும், எங்களின் தற்போதைய வளர்ச்சிக்கு ஆதரவாக அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்றும் நம்புகிறோம்.

எங்களின் பிரார்த்தனையும் நட்பும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.

நன்கொடை அளிக்க

இதைப் பகிர