"நான் பரமஹம்ஸ யோகானந்தரை 1935-ல் கொல்கத்தாவில் சந்தித்தேன். அன்றிலிருந்து அமெரிக்காவில் அவரது பணிகளின் விவரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இருட்டின் நடுவில் பிரகாசமான ஒளி ஜொலிப்பதைப் போல பரமஹம்ஸ யோகானந்தரின் இருப்பு இவ்வுலகில் இருந்தது. இவரைப் போன்ற தலைசிறந்த ஆத்மா இப்பூவுலகில் அரிதாகவேதான், மானிடர்கள் மத்தியில் உண்மையான தேவை இருக்கும் போது, வருகிறார்."
— காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்,பூஜ்ய ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள்
[பரமஹம்ச யோகானந்தரது] ஒரு யோகியின் சுயசரிதம் பல வருடங்களாக பிரபலமான மிகச் சிறந்த விற்பனை புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள அவரது ஸெல்ஃப்-ரியலைசேஷன் மையங்கள், உண்மையாக இறைவனைத் தேடும் ஆன்மாக்களுக்கு மிகப் பிரியமான ஏகாந்தவாச இல்லங்களாக விளங்குகின்றன. . . . நான் 1950-ல் பெருநகர லாஸ் ஏஞ்சலீஸில் [ஸெல்ஃப்-ரியலைசேஷன் தலைமையகத்தில்] அவரைச் சந்தித்தபோது அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூறுகிறேன். . . . அவர் ஐயத்திற்கு இடமின்றி மீட்பர் போல் இருந்தார். அவரது தளர்ச்சியான நீண்ட காவி நிற அங்கி ஒரு வலிமையான தேகத்தை மறைத்திருந்தது, அவரது உரம்வாய்ந்த தோற்றம் அந்த அறையை ஒரு வசீகர சக்தியால் செறிவூட்டியது. என் காவியச் சிந்தனையை நினைவு கூறுகிறேன், 'அவர் பிரபஞ்சத்தின் பேரவாவை அதன் ஆனந்தத்துடன் சேர்த்து எடுத்துச் செல்கிறார்.’ அவரைச் சூழ்ந்திருக்கும் அமைதி இவ்வுலகைச் சார்ந்ததல்ல, அத்துடன் அவரது சாந்தம் நமது தினசரித் தேடலில் நாம் எதிர்நோக்கும் வகைக்கு அப்பாற்பட்டது. அவர் பிரபலமாயிருப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படை. . . .
அவரது வெற்றி வசீகரத்தை விட மேலானது. அவர் ஓர் ரகசியத்தை வைத்திருந்தார், கிரியா யோக (உலகளாவிய செயற்பாட்டு யோகம்) ரகசியம், அதுதான் இன்று மேலைநாட்டு ஆர்வம் மற்றும் கவனத்திற்கான ஹதயோகத்துடன் இணைந்துள்ள முக்கியப் போட்டியாளர்."— டாக்டர் மார்க்ஸ் பேக், எழுத்தாளர்-கல்வியாளர்,மதகுரு,யுனைடெட் சர்ச் ஆஃப் கிரைஸ்ட்
“சுவாமி யோகானந்தரிடம் எடுத்துக் கொண்ட ஒருவாரப் பயிற்சியில், நான் பட்டம் பெற்ற இரண்டு பல்கலைக் கழகங்களில் மற்றும் இரண்டு இயேசுக்கழக பயிற்சிப் பள்ளிகளில் பெற்றதைவிட அதிக மெய்யான கல்வியைப் பெற்றுள்ளேன். இந்தக் கல்விப் பயிற்சி எனக்கு ஓர் அதிர்ச்சி தரும் உண்மையின் வெளிப்பாடாக உள்ளது. பொருள் விளக்கத்திற்கும் அனுபூதிக்கும் இடையே உள்ள இன்றியமையாத வித்தியாசத்தை நான் கற்றுள்ளேன். . . . . என் சகோதர போதகர்கள் உண்மையின் ஒரு வாழும் அனுபவத்தைப் பெற்றுள்ள ஓர் ஆசானின் அருள் மிக்க கிறிஸ்து போன்ற தாக்கத்தின் கீழ் வரவேண்டுமென விரும்புகிறேன்."
— அருள்திரு ஆர்தர் போர்ட்டர், எம். ஏ., டி. டி, மதகுரு,காங்கிரேகேஷன்ஸ் சர்ச், லண்டன்
“சுவர்க்கத்திலோ அல்லது பூமியிலோ உள்ள எந்த சக்தியாவது மனிதர்களுக்கு மற்றும் நாடுகளுக்கு இடையில் சமாதானத்தையும் ஏற்படுத்தி அத்துடன் மனித இதயத்தையும் குணப்படுத்துமானால், அந்த சக்தி யோகானந்தருடைய போதனைகளில் கண்டறியப்படுவதாக இருக்கும்.”
— அருள்திரு. எட்வர்ட். லோஹ்மேன் கிளீவ்பேண்ட், ஓஹையோ
“நான் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பில் (பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது.) மிக உயர்ந்த ஆன்மீகம், சேவை மற்றும் அன்பைக் கண்டேன்.”
— பூஜ்ஜிய ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்தர்,பூரி சங்கராச்சாரியார்
"விலைமதிப்பற்ற ஓர் அரிய மாணிக்கம், உலகம் இதுவரையில் இவரைப் போன்ற ஒருவரை இன்னும் காணவில்லை, பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் பெருஞ்சிறப்பு எனக் கருதப்படும் புராதன ரிஷிகள் மற்றும் ஞானிகளின் ஓர் இலட்சியப் பிரதிநிதி ஆவார்.
“அவர் ஆன்மீகத் துறையில் மிகவும் மதிப்பு மிகுந்த சேவை புரிந்துள்ளார். அவர் அனைவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கும், மனிதனிடம் உள்ளுறைந்துள்ள ஆன்மீக டைனமோவை இயக்க வைத்ததின் மூலம் வெகுவாக உதவியுள்ளார். ஸ்ரீ யோகானந்தர் இறைவனின் எல்லா குழந்தைகளுக்கும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் எனும் சாசுவத ஆதாரத்திலிருந்து பேரளவில் பொழியும் தேனைப் பருகுவதற்கு சாத்தியமாக்கியுக்கியுள்ளார்.
இன்று உலகெங்குமுள்ள யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் மையங்கள் பரமஹம்ஸ யோகானந்தர் செயல் நிலையில் இருப்பதை எடுத்துக் கூறுகின்றன. அவை உலகின்மீது அமைதியையும் பேரின்பத்தையும் பொழியும் ஒரு மிகவும் நெருக்கமாகப் பின்னப்பட்ட ஆன்மீகக் காந்த வலையை உண்டாக்கியவாறு தாமாகவே பன்மடங்கு பெருகும்."— சுவாமி சிவானந்தர், டிவைன் லைஃப் சொஸைட்டி, ரிஷிகேஷ், இந்தியா