புனித கிறிஸ்துமஸ் பருவகாலத்தின் ஒளியும் ஆனந்தமும், உங்கள் இதயத்தை இறையன்பின் புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வுடனும், அதன் மாற்றமுறவும் இணக்கமுறவும் செய்யும் சக்தியில் உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உலக வாழ்க்கையை விசுவாசத்துடனும் எழுச்சியூட்டட்டும். இந்த வெளிப்புற பண்டிகைக்காலத்தின் அந்த உள்ளார்ந்த புனித பரிமாணத்தை, நாம் ஒவ்வொருவரும், நமது அன்புக்குரிய பகவான் இயேசு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தெய்வீகக்குணங்களை நமது இதயங்களில் ஏற்றுக்கொள்ள ஒரு சிறப்பு முயற்சி மேற்கொள்வதன் மூலம் தெளிவாக அனுபவிக்க முடியும் – குறிப்பாக, நமது குருதேவர் ஊக்கப்படுத்தியவாறு உலகளாவிய கிறிஸ்து – அன்பு மட்டும் மொழியை நமது உணர்வு நிலைகளில் பெற்றுக்கொள்ள ஆழ்ந்து தியானிப்பதன் மூலம், அந்த முயற்சியில், இந்த உலகில் நாம் எங்கிருந்தாலும், இந்தப் புனிதகாலத்தில், நமது பக்தியை ஒன்றிணைப்பதன் மூலம் நாம் கிறிஸ்துமஸ் காலத்தின் உண்மையான அருளாசிகளை, முழுமையான வழியில் பெறுவோம்.
இயேசு கிறிஸ்து மற்றும் பிற மகாத்மாக்கள் மூலமாக இறைவன் இந்த உலகில் மனித வடிவில், நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும், நமது போராட்டங்களில் நமக்கு பரிவுமிக்க உதவியை அளிப்பதற்கும் மேலும் நம்முள், எடுத்துக்காட்டு மூலம் நமது சொந்த தெய்வீகப்பரம்பரைச் செல்வத்தை நாம் மீண்டும் பெறத் துணிவையும் தீர்மானத்தையும் எழுப்பவும், வெளிப்படுகிறான். குருதேவர் நமக்கு கூறியதுபோல்,” கிறிஸ்துமஸ்ஸின் உண்மையானக் கொண்டாட்டம் நமது சொந்த உணர்வு நிலையில் கிறிஸ்து உணர்வு நிலையின் உதயத்தை உணர்வதில்தான் உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு, நீங்கள் ஒரு பலவீனமான மனிதன் என்ற கனவில் இருந்து உங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த தெய்வத்தன்மையை மெய்ம்மைக்கு நீங்கள் விழித்தெழுவதற்கான ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும். உங்களைத் தடைப்படுத்தியுள்ள அனைத்து வரையறைப்படுத்தும் எண்ணங்களும் பழக்கங்களும், மாயையால் என்பது உணர்வு நிலையின் மீது திணிக்கப்பட்ட ஏமாற்றுக் கனவுகளே. அவையாவும், நீங்கள் பொறுமையாகவும் விடாப்பிடியுடனும், கிறிஸ்துவம் மற்ற மகாத்மாக்களும் காட்டியுள்ள பணிவு, அன்பு மற்றும் இறைத் தொடர்பு ஆகியவற்றின் உணர்வுநிலையைப் பெரிதாக்கும் வழியினைப் பின்பற்றும்போது, உங்கள் சுதந்திர விருப்பத்தேர்வு மற்றும் இறைக்கருணை ஆகியவற்றின் சக்தியின் மூலம், ஒழிக்கப்படும். இறைவன் மீது உங்கள் விசுவாசத்தை வைத்து, உங்கள் மனம் மற்றும் இதயத்திலிருந்து அச்சங்களையும் கவலைகளையும் விடுவித்தால், அமைதியும் கிறிஸ்து சமாதானமும் உங்கள் உணர்வு நிலையினுள் பொழியும்; அவை இறைவனின் ஆதரிக்கும் சக்தி மற்றும் அனைத்தையும் குணமாக்கும் ஒளி ஆகியவற்றின் அக உத்தரவாதத்தைக் கொணரும். இயேசு செய்தது போல், மற்றவர்களுக்கு அன்பையும் கனிவையும் பரப்புவதற்கும், அவர்களிடத்தில் நன்மையைக் கண்டு அதை ஊக்குவிப்பதற்கும் தன்னலமற்ற சேவையில் மகிழ்ச்சியை காண்பதற்கும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், நீங்கள் அக ஆனந்தத்தையும், எல்லையற்றவனுடனான இணக்கத்தையும் காண்பீர்கள். இதையேதான், பரமஹம்ஸர் “ஒவ்வொரு நல்ல எண்ணத்திலும் கிறிஸ்துவின் இரகசிய இல்லம் உள்ளது” என்று கூறியபோது பொருள்பட்டார்.
நாம், நமது வாழ்க்கையில் இறைவனது தெய்வீகப்பண்புகளை ஆழ்ந்து சிந்திக்க கடும் முயற்சி செய்யும்போது, உலகளாவிய கிறிஸ்து நம்முடன் வாழ்கிறார். ஆனால் அந்த எல்லையற்ற உணர்வு நிலையின் மெய்ம்மையை முழுவதுமாக அனுபவிப்பதற்கு நாம், ஆன்மாக்களின் அகத்தே மௌனத்தொடர்பு எனும் புனித ஆலயத்தினுள் புக வேண்டும்; அங்கு நாம் நமது இருப்பு முழுவதும் ஊடுருவும் இறைவனது அன்பை மாற்றம் செய்யும் சக்தியை உணர்கிறோம். தெய்வத்தந்தையுடனான அந்த அகத்தொடர்புதான் கிறிஸ்துவிற்கு தனது பணியை நிறைவேற்றுவதற்கான வழியையும் துணிவையும் கொடுத்தது மட்டுமின்றி அத்துடன் அனைத்து மனித வரையறைகளையும் கடந்த ஓர் அன்பையும் கொடுத்தது. தன்னுள் தெய்வீக இருப்பை உணர்ந்து அனைத்திலும் இறைவனைக்காண ஆரம்பிக்கும் ஒவ்வொரு ஆன்மாவும், கிறிஸ்து உணர்வு நிலைப் பேரொளியின் ஒரு உணர்வுபூர்வமான அங்கமாக மாறுகிறது: அந்த பேரொளியில் கிறிஸ்து வாழ்ந்தார், அவ்வொளி இந்த உலகத்தில் மேலும் மேலும் கூடுதலான ஆன்மாக்களை இறையன்பின் தெளிவாகத் தெரியும் அரவணைப்பினுள் ஈர்ப்பதன் மூலம் மிகச்சிறந்த இணக்கத்தையும்,நல்லெண்னத்தையும் கொணரும் சக்தியைப் பெற்றுள்ளது.
அத்தெய்வீக அன்பின் ஞானமே உங்களுக்கும் உங்கள் அன்புக்கிரியவர்களுக்கும் இக் கிறிஸ்துமஸின் இறைவன் அருளாசிகளாகத் திகழட்டும்.
சுவாமி சிதானந்த கிரி
தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர், யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்.