YSS சென்னை ஆசிரமத்தில் உள்ள வசதிகளை இடைக்காலமாக மேம்படுத்துதல்

15 செப்டம்பர், 2024

யோகதா சத்சங்க சொஸைடி இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி, YSS பக்தர்களுக்கு தினசரி தியானங்கள், ஆன்மீக ஆலோசனை, சத்சங்கங்கள், சாதனா சங்கங்கள், ரிட்ரீட் நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு கூரும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, பிப்ரவரி 7, 2024 அன்று சென்னை ரிட்ரீட்டில் YSS சன்னியாசிகளின் நிரந்தர இருப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தார். அப்போதிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது, மேலும் அதிகமான பக்தர்கள் ஆன்மீக புத்துணர்ச்சியையும் வழிகாட்டுதலையும் நாடுவதால் இந்த தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய வசதிகளில் உள்ள சவால்கள்

தற்போதுள்ள வசதிகள் – முதலில் ரிட்ரீட் நிகழ்ச்சிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை – இப்போது இந்த அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. ஆசிரமத்தின் விரிவடைந்து வரும் சேவையை ஆதரிக்க தங்குமிடம், சமையலறை, உணவுப் பகுதிகள், நிர்வாகம் மற்றும் பிற துணை வசதிகளுக்கு குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் தேவை.

சில முக்கிய சவால்கள் பின்வருமாறு:

  1. விருந்தினர் தங்குமிடம்: பெரும்பாலான தங்குமிடங்கள் பகிரப்படும் தங்குமிட பாணியில் உள்ளன, இருப்பினும், பல பக்தர்கள் குளியலறையுடன் கூடிய தனி அறைகளைக் கோரியுள்ளனர்.
  2. சேவகர்களின் தங்குமிடம்: முழுநேர சேவகர்களுக்கும், சமையலறை, வரவேற்பு மற்றும் பிற பகுதிகளை மேற்பார்வையிடுவோருக்கும் அறைகள் பற்றாக்குறை உள்ளது.
  3. சன்னியாசிகள் குடியிருப்புகள்: சன்னியாசிகள் தற்போது ஒரு சிறிய, மறுவடிவமைக்கப்பட்ட, முன்னாள் பராமரிப்பாளரின் பகுதியில் வசித்து வருகின்றனர், இதில் அலுவலக இடம், உணவறைப் பகுதி, சமையலறை மற்றும் சலவை போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை.
  4. அலுவலகம் மற்றும் வரவேற்பு: அதிகரித்து வரும் நிர்வாகப் பணிச்சுமையைச் சமாளிக்க தற்போதுள்ள அலுவலக இடத்தை அதிகரிக்க வேண்டும். சிறப்பு நிகழ்வுகளின் போது, வரவேற்பு மற்றும் பதிவு ஒரு மரத்தின் கீழ் நடைபெறுகிறது. மேலும், புத்தகக் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனைக்கு போதுமான இடம் இல்லை.

வசதிகளின் இடைக்கால மேம்படுத்தலுக்கான தேவை

ஆசிரமத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு விரிவான மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், சீரான செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்தி, பக்தர்கள், சேவகர்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு வசதியான தங்குமிடங்கள் மற்றும் சேவைகளை வழங்க வேண்டும்.

திட்டமிடப்பட்டுள்ள வசதி மேம்பாடுகள்

பின்வருபவை தங்குமிட வசதிகளின் கட்டடக்கலை விளக்கங்கள் ஆகும்.

ஆண்கள் தங்குமிடத்திற்கான கட்டிடக்கலை விளக்கக்காட்சி
பெண்கள் தங்குமிடத்திற்கான கட்டிடக்கலை விளக்கக்காட்சி
  1. ஆண்களுக்கான தங்குமிடம்: முதல் மாடியில் உள்ள ஒரு பெரிய தங்குமிடத்தை குளியலறையுடன் கூடிய ஆறு இரட்டை படுக்கை அறைகளாக மாற்றவும், இரண்டாவது மாடியில் நான்கு பெரிய அறைகள், ஒவ்வொன்றும் நான்கு படுக்கைகள் மற்றும் இணைக்கப்பட்ட குளியலறைகளுடன் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  2. பெண்கள் தங்குமிடம்: இதேபோல், முதல் மாடி தங்குமிடத்தை குளியலறையுடன் கூடிய ஆறு இரட்டை படுக்கை அறைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில், தலா நான்கு படுக்கைகள் கொண்ட மூன்று பெரிய அறைகள் மற்றும் குளியலறையுடன் கூடிய ஒரு இரட்டை படுக்கை அறை கட்டப்படும்.
  3. அலுவலகத் தொகுதி: வரவேற்பு, புத்தக காட்சி மற்றும் விற்பனை, அகவுண்ட்ஸ் மற்றும் தங்கி பணியாற்றும் சேவகருக்கான இடம், ஒரு ஸ்டோர் மற்றும் ஒரு பொது கழிப்பறை ஆகியவற்றிற்கான புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும். இந்த தொகுதி, ஆசிரமத்தின் அனைத்து அமைப்பு மற்றும் அவுட்ரீச் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  4. சன்னியாசி குடியிருப்புகள்: ஆறு அறைகள், குளியலறைகள், ஒரு அலுவலக பகுதி, ஒரு கூடும் அறை, ஒரு சமையலறை மற்றும் சன்னியாசிகளுக்கான உணவறை வசதிகள் கொண்ட ஒரு பிரத்யேக தொகுதி கட்டப்படும்.
  5. சேவகர்கள் தொகுதி: சன்னியாசிகள் தங்கள் தற்போதைய குடியிருப்புகளை காலி செய்தவுடன், இவை சேவக் தம்பதிகளுக்காக ஆறு குடியிருப்புகளாக மாற்றப்படும், ஒவ்வொன்றும் இணைக்கப்பட்ட குளியலுடன் இருக்கும்.

இந்த மேம்பாடுகள் ஆசிரம உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்தும் – அதிக இட வசதி, சிறந்த தளபாடங்கள், விசாலமான குளியலறைகள், கூடுதல் வசதிகளுடன் மேம்பட்ட அலுவலக இடம் ஆகியவற்றை வழங்கும்.

மதிப்பிடப்பட்ட செலவு

இந்த மேம்படுத்தல்களுக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ₹ 4 கோடி. உங்கள் தாராளமான நன்கொடை, பக்தர்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகை தரும்போது மிகவும் உன்னதமான மற்றும் ஆன்மீக ரீதியில் பலனளிக்கும் அனுபவத்தை உணர உதவும்.

இதைப் பகிர