ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாற்று ஓவியம்
ராஜரிஷி ஜனகானந்தர் (ஜேம்ஸ் ஜே. லின்) பரமஹம்ஸ யோகானந்தரின் அன்புக்குரிய சீடராக இருந்தார், மேலும் பிப்ரவரி 20, 1955 அன்று அவர் இறக்கும் வரை, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவராகவும், ஆன்மீக முதல்வராகவும் அவருடைய முதல் வாரிசாக இருந்தார். திரு. லின் முதன்முதலில் 1932-ல் பரமஹம்ஸரிடமிருந்து கிரியா யோக தீட்சை பெற்றார்; குருதேவர் 1951 -ல் ராஜரிஷி ஜனகானந்தர் என்ற சன்னியாசப் பட்டத்தை அவருக்கு வழங்கும் வரை, அவரை “செயிண்ட் லின்” என்று அன்புடன் குறிப்பிடும் அளவிற்கு அவரது ஆன்மீக முன்னேற்றம் அத்துணை விரைவாக இருந்தது.வாழ்க்கை வரலாற்று ஓவியம் ராஜரிஷி ஜனகானந்தர்: எ கிரேட் வெஸ்டர்ன் யோகி, என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் வெளியிட்ட இந்த புத்தகத்தில் இன்னும் விரிவான வாழ்க்கை வரலாறும் அவரது பேச்சுக்களில் இருந்து சில பகுதிகளும் உள்ளன. பரமஹம்ஸர் அவருடன் தனிப்பட்ட முறையில் கடிதப் பரிமாற்றம் செய்த அறுபது பக்கங்களுக்கும் மேலாக இதில் இடம்பெற்றுள்ளன — அவர்கள் பகிர்ந்து கொண்ட நெருக்கமான ஆன்மீக இசைவின் மின்னல் காட்சிகளை வழங்கும், மற்றும் குரு-சீடர் உறவின் ஆழத்தைச் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தும் வழிகாட்டலும் அன்பும் நிறைந்த வார்த்தைகள்.
ராஜரிஷியின் சுருக்கமான பேச்சுக்களின் ஒலிப்பதிவுகள், பரமஹம்ஸ யோகானந்தரின் அரிதாகப் பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் கொண்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெல்லோஷிப்பின் “அரிய தொகுப்பு தொடர்”-ல் உள்ள குறுந்தகடுகள் இரண்டில் சேர்க்கப்பட்டுள்ளன: