YSDM-திருப்பதிஆ.பி., புங்கனூர் சுகாதார மையம்

13 மே, 2022

ஏப்ரல் 28, 2022 அன்று, புங்கனூரில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்தில் யோகதா சத்சங்க தியான மண்டலி – திருப்பதி (ஒய்.எஸ்.டி.எம் – திருப்பதி) அமைத்த 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் உயர் சார்பு பிரிவு (பி.ஹெச்.டி.யு) ஆந்திர அரசின் எரிசக்தி, வனம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஸ்ரீ பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சுகாதார வசதியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பக்தர்கள், ஆந்திரப் பிரதேசம் புங்கனூரில் மருத்துவமனை மேம்பாட்டுக் குழு நடத்திய இந்த தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மார்ச் 2020 முதல், கோவிட் -19 பெருந்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியதிலிருந்து, ஒய்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல நிவாரண நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. இவற்றைப் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தை இங்கே ஒரு தனி வலைப்பதிவில் படிக்கலாம்.

குழந்தைகளின் சிகிச்சைக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஒய்.எஸ்.டி.எம்- திருப்பதி, முன்னதாக ராஞ்சியில் ஒய்.எஸ்.எஸ் ஆல் அமைக்கப்பட்ட அத்தகைய பி.ஹெச்.டி.யு வார்டுகளின் வெற்றிகரமான தாக்கத்தைக் கவனித்து, புங்கனூரில் உள்ள உள்ளூர் சமூக சுகாதார மையத்தின் ஒரு பகுதியை 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் உயர் சார்பு பிரிவு (பி.ஹெச்.டி.யு) சிறப்பு வார்டாக மாற்றியது. 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில், குழந்தைகளுக்கு அதிக ஆபத்து முன்னறிவிக்கப்பட்டிருந்த கோவிட்-19 மூன்றாவது அலையின் பின்னணியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஒய்.எஸ்.டி.எம் - திருப்பதி புங்கனூரில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்தில் ஒரு சிறப்பு உயர் சார்பு குழந்தை மருத்துவ பிரிவை அமைக்கிறது

பி.ஹெச்.டி.யு வார்டில் இப்போது அதிக சார்பு கண்காணிப்பு பிரிவுகள் மற்றும் ஒரு பிரத்யேக ஆக்ஸிஜன் விநியோகத்துடன் இணைக்கப்பட்ட செமி-ஃபெளலர் படுக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒய்.எஸ்.டி.எம் – திருப்பதி, வார்டுக்கு உயர் தரமான உபகரணங்களை வழங்கியது, இதில் குழந்தையின் முக்கிய உயிர்நிலை உறுப்புகளைக் கண்காணிக்க மல்டிபாரா மானிட்டர்கள் மற்றும் சிரிஞ்ச் குழாய்கள்; நெபுலைசர்கள்; ஒரு போர்ட்டபிள் உறிஞ்சும் கருவி; ஒரு ஆட்டோகிளேவ் இயந்திரம்; சிறப்பு ஆக்ஸிஜன் மாஸ்க்குகள்; சக்கர நாற்காலிகள்; ஸ்ட்ரெச்சர்கள்; செயற் கருவிகள்; படுக்கை லாக்கர்கள், மற்றும் திரைகள். ஆகியவை அடங்கும்.

இந்த வார்டில் மேம்பட்ட சுகாதார கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன
வார்டின் சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் அதை குழந்தைகளுக்கு உகந்ததாக ஆக்குகின்றன

ஒய்.எஸ்.டி.எம் – திருப்பதி, குழந்தைகள் வார்டுக்கு சொந்தமான கட்டிடத்தில் விரிவான புனரமைப்பு பணிகள் மேற்கொண்டது. நீர் கசிவு தடுக்க கூரையில் நீர் புகாத பூச்சு பூசப்பட்டது. வார்டுக்கு அருகில் ஒரு விளையாட்டுப் பகுதி சேர்க்கப்பட்டது. செவிலியர்களின் ஓய்வறை புதுப்பிக்கப்பட்டது, மேலும் உதவியாளர்களுக்கு முகப்பு வெப்பமூட்டும் தகடுகள் வழங்கப்பட்டன. கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளும் புதுப்பிக்கப்பட்டன. வார்டு சுவர்களில் குழந்தைகளுக்கு ஏற்ற ஓவியங்கள், மின் பொருத்துதல்கள், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் சேர்த்து வார்டுக்கு ஒரு முழுமையான பொலிவேற்றம் கொடுக்கப்பட்டது.

மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீ பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி அவர்கள், தொலைதூரப் பகுதியில் அமைந்திருந்தாலும், எளிமையான மருத்துவமனை இடத்தை உயர்தர, தொழில்நுட்ப வசதியுள்ள வார்டாக மாற்றியமைத்த யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மற்றும் அதன் உறுப்பினர்களின் முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். புங்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளர்ச்சியடையாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த இது பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக சித்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ என். ரெட்டப்பாவும், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநரும் துணைவேந்தருமான டாக்டர் பி.வெங்கம்மா சிறப்பு கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். மற்ற விருந்தினர்களில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு அதிகாரிகளும் இருந்தனர்.

இந்த வசதியைத் தொடங்கி வைக்க தலைமை விருந்தினர் ரிப்பனை வெட்டுகிறார், ஏப்ரல் 28, 2022
ஏப்ரல் 28, 2022 அன்று இந்த வசதியைத் தொடங்கி வைக்க தலைமை விருந்தினர் ரிப்பனை வெட்டுகிறார்
ஒய்.எஸ்.டி.எம் - திருப்பதி பக்தர்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சி.ஹெச்.சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

ஒய்.எஸ்.டி.எம் – திருப்பதியைச் சேர்ந்த ஒய்.எஸ்.எஸ் பக்தர், சேவை நடவடிக்கைகளில் அமைப்பின் கவனம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். புங்கனூர் குழந்தைகளின் நலனுக்காக இந்தத் திட்டத்தை மேற்கொள்ள வாய்ப்பளித்ததற்காக ஒய்.எஸ்.எஸ் -ன் நன்றியையும் அவர் தெரிவித்தார்.

அச்சு ஊடக கவரேஜ்

இதைப் பகிர