YSS/SRF தலைவர் சுவாமி சிதானந்தா கிரி இந்தியாவில் உள்ள ஆசிரமங்களுக்கு வருகை புரிகிறார்

20 நவம்பர், 2017

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவர் சுவாமி சிதானந்த கிரி சமீபத்தில் பரமஹம்ஸ யோகானந்தரது சொஸைடியின் ஆன்மீகத் தலைவராக, தன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அவர் லாஸ்ஏஞ்சலீஸிலுள்ள தலைமையகத்தில் இருந்து அக்டோபர் 28ஆம் நாள் புறப்பட்டு பரமஹம்ஸரின் தாயகமான இந்தியாவை அடைவதற்கு முன் லண்டனில் சில மணி நேரங்கள் தங்கினார். இந்தியாவில் நவம்பர் 18 வரை இருந்தார். இந்த காலத்தில் அவர் ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களுக்கு விஜயம் செய்து, 2017 சரத்சங்க காலத்தின் போது சில முக்கியமான நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினார். ஒய். எஸ். எஸ் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிதானந்தரது விஜயம் இன்னும் அதிசிறப்பாக அமைகிறது.

சுவாமி சிதானந்த கிரியுடன் நீண்டகால சன்னியாசியும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் இயக்குனர்கள் குழு உறுப்பினருமான சுவாமி விஸ்வானந்தரும் பிரம்மச்சாரி செளசன்யானந்தரும் உடன் வந்தனர்.

அவர்களது பயணத்தில் சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இந்த வலைதள பக்கத்தை, வரும் வாரங்களில், கூடுதல் செய்திகளுக்குப் பார்க்கலாம்.

அக்டோபர் 28 எஸ்.ஆர்.எஃப் தலைமையகத்தில் இருந்து புறப்படுதல்.

அவர்கள் லாஸ்ஏஞ்சலீஸிலுள்ள எஸ்.ஆர்.எஃப் சர்வதேச தலைமையகத்தில் இருந்து புறப்பட்ட பொழுது, தலைமையகத்திலுள்ள சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகள் இதயபூர்வமான பிரியாவிடையின்போது அவர்கள் மீது ரோஜா இதழ்களைத் தூவினார்கள்.

காணொளி சிறப்பம்சங்கள்:

எஸ்.ஆர்.எஃப் லண்டன் மையத்திற்கு வருகை, அக்டோபர் 29

லண்டனில் கிடைத்த 8 மணி நேர நிறுத்தம், லண்டன் எஸ் ஆர் எஃப் மையத்திற்கு செல்வதற்கான ஒரு சுருக்கமான வருகைக்கு வாய்ப்பளிக்கிறது. சுவாமி சிதானந்தர் ஒரு சிறிய உரையை நிகழ்த்தி, இங்கிலாந்து முழுவதிலும் இருந்து வந்திருந்த பல நூறு எஸ் ஆர் எஃப் உறுப்பினர்களுக்கு ஒரு தியானத்தை வழிநடத்துகிறார். பயணம் செய்யும் சன்னியாசிகள் தமது பயணத்தின் அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகும் வகையில் இந்திய சன்னியாச ஆடைகளை அணிகின்றனர்.

இந்தியாவை வந்தடைந்தடைதல், அக்டோபர் 30.

சுவாமி சிதானந்தாஜியும் அவரது குழுவும் புதுடெல்லி வந்தடைகிறார்கள், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை சுவாமி ஸ்மரணானந்தர், சுவாமி சுத்தானந்தர் மற்றும் தில்லி ஒய். எஸ். எஸ் கேந்திரா (மையம்) உறுப்பினர்களால் வரவேற்கப்படுகின்றனர். சிதானந்தாஜியும் அவருடன் வந்த சன்னியாசிகளும் பிறகு தியான மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு ஏராளமான ஒய். எஸ். எஸ் பக்தர்களால் உற்சாகமாக மகிழ்ச்சியுடனும் வரவேற்கப்படுகின்றனர்.

நொய்டா ஆசிரமத்தில் சத்சங்கம், நவம்பர் 1.

தில்லி கேந்திராவிலிருந்து சுவாமி சிதானந்தாஜியும் அவருடன் வந்த சன்னியாசிகளும் ஒய். எஸ். எஸ் நொய்டா ஆசிரமத்தை நோக்கி ஒரு பன்னிரண்டு மைல் பயணத்தை மேற்கொள்கின்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அவர்களை வரவேற்க குழுமியிருந்தனர். அன்று மாலை சுவாமி சிதானந்த கிரியுடன் ஒரு சத்சங்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒரு மணி நேர தியானம் மற்றும் கீர்த்தனையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சுவாமி சிதானந்தர் ஒரு எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்தினார். உரையின் போது அவர், தான் ஒரு ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவரானவுடன் இந்தியாவிற்கு, விஜயம் செய்வதற்கு ஒரு தீவிர ஆசையை உணர்ந்ததாகவும் இந்தியாவில் தாம் பெற்ற, திணறவைக்கும், வரவேற்பினைத் தாம் ஆழ்ந்து போற்றுவதாகவும், குறிப்பிட்டார்.

2017_தலைவர்_சு.சிதானந்தஜி_நொய்டா டெல்லி_03(1)

ராஞ்சியில் சத்சங்கம், நவம்பர் 2 – 5

சுவாமி சிதானந்தா, நவம்பர் 2 ஆம், தேதி ராஞ்தி ஆசிரமத்தை வந்தடைந்தார். அங்கு அவரை நவம்பர் 3ஆம் தேதி முதன் முதலாக சரத் சங்கத்தில் உரையாற்றினார். சபையில் அவர், ஸ்ரீ மிருணாளினி மாதா அருளிய ஸ்ரீ தயா மாதாவுடன் இந்தியா மகான்களை தரிசித்தல் எனும் நூலின் ஒய் எஸ் எஸ் பதிப்பை அறிமுகப்படுத்தினார்.

2017_சரத்சங்கம்1_ராஞ்சி_04

நவம்பர் 5ஆம்தேதி  சுவாமி சிதானந்தர் முதல் வார நிறைவு சரத்சங்கத்தில் உரையை நிகழ்த்தினார். மூத்த ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். மீண்டும் அவர், பரமஹம்ஸரின் எப்படி – வாழ – வேண்டும் கோட்பாடுகளை தினசரி வாழ்வில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பற்றி ஒரு எழுச்சியூட்டும் நடைமுறை ரீதியான சொற்பொழிவாற்றினார்.

2017_சரத்சங்கம்1_ராஞ்சி_05(1)

பின்னர், சங்கத்திற்கு வருகை தந்திருந்த சுமார் 1700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அவரிடமிருந்து பிரசாதத்தையும் ஒரு நினைவு பரிசையும் அத்துடன் ஒய் எஸ் எஸ் நூற்றாண்டு சின்னம் அதன் பின்புறத்தில் ஸ்ரீ மிருணாளினி மாதாவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு ரோஜா இதழ் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ‘லேமினேட்’ செய்த அட்டையையும் பெற முன்வந்தனர். “அவரது வியக்கத்தக்க ஒளிமிக்க முன்னிலை அனைவரையும் எழுச்சியூட்டுகிறது” என்று அங்கு வந்திருந்த அனைவரது உணர்வையும் பிரதிபலிக்கும் வண்ணம் சுவாமி சிதானந்தரைப் பற்றி ஒரு பக்தர் எழுதினார்.

2017_சரத்சங்கம்1_ராஞ்சி_01

ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரம வளாகத்தில் சுவாமி சிவானந்தர் அவர்கள் (இடமிருந்து வலமாக) சுவாமி விஸ்வானந்தர், சுவாமி கிருஷ்ணானந்தர், பிரம்மச்சாரி செளசன்யானந்தர், சுவாமி சிரத்தானந்தர் மற்றும் சுவாமி நிர்வாணந்தர்

தக்ஷிணேஸ்வர ஆசிரமத்தை வந்தடைந்தல், நவம்பர் 6

சுவாமி சிதானந்தாஜியின் அடுத்த பயண இலக்கு தக்ஷிணேஸ்வர ஆசிரமம். அவர் அங்கு நவம்பர் 6ஆம் தேதி காலையில் சென்றடைந்து ஒய்.எஸ்.எஸ் சன்னியாசிகள், தொண்டர்கள் மற்றும் இல்லற சீடர்களிடமிருந்து ரோஜா இதழ் வரவேற்பைப் பெற்றார். ஆரத்தி மற்றும் நன்றியுணர்வு பரிமாற்றங்களுக்குப் பிறகு, அவரது வருகையை முன்னிட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஆசிரமத்தைச் சுற்றிப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டார்.

2017_சுவாமி_சிதானந்தா_விஜயம்_தக்_04

பரமஹம்ஸ யோகானந்தரது பிள்ளைப்பருவ இல்லத்திற்கு விஜயம், நவம்பர் 6

அன்று மாலை சுவாமி சிதானந்தாஜியும் அவரது குழுவும் கொல்கத்தாவிலுள்ள ஒய் எஸ் எஸ் கர்பார் கேந்திராவிற்கும் அத்துடன் கூட 4, கர்பார் தெருவிலுள்ள பரமஹம்ஸரின் பிள்ளைப் பருவ இல்லத்திற்கும் விஜயம் செய்தனர். இவ்வில்லம் கர்பார் தியான மையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. ஸ்ரீ சோமநாத் கோஷும் அவரது (பரமஹம்ஸ யோகானந்தர் சன்யால் கோஷின் பேரன்) மனைவி ஸ்ரீமதி சரிதா கோஷும் சன்னியாசிகளை மிகுந்த உச்சரிப்புடன் வரவேற்றனர்.

PY_Childhood_Home_01

செராம்பூர் மற்றும் தக்ஷிணேஸ்வர், நவம்பர் 7

சுவாமி சிதானந்தாஜியும் அவரது குழுவும், ஒரு காலத்தில் செராம்பூரில் யுக்தேஸ்வரரது ஆசிரமத்தின் ஒரு பகுதியாக திகழ்ந்த நிலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீயுக்தேஸ்வர் ஸ்மிருதி மந்திருக்கு விஜயம் செய்தனர். இந்த மந்திர் 1977ல் ஸ்ரீ மிருணாளினி மாதாவினால் ஒய் எஸ் எஸ் வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அர்ப்பணிக்கப்பட்டது.

2017_சரத்_சங்கம்_ராஞ்சி

தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திற்கு மாலையில் திரும்பி, சுவாமி சிதானந்தாஜி 600 பக்தர்களுக்கு ஒரு மிகவும் எழுச்சியூட்டும், திறந்தவெளி சத்சங்கம் அளித்தார்.

ராஞ்சியில் இரண்டாவது சரத்சங்கம், நவம்பர் 14

சுவாமி சிதானந்தாஜி, நவம்பர் 12 – 17 வரை நடைபெற்ற இரண்டாவது சரத்சங்கதில் கலந்து கொள்வதற்காக ராஞ்சி ஆசிரமத்திற்கு திரும்பினார். இச்சரத்சங்கத்தில், 40 ஆண்டுகால சரத்சங்க வரலாற்றிலேயே முதன்முதலாக மிக அதிக அளவில், 2000க்கும் மேற்பட்ட பக்தர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர். நவம்பர் 14ம் தேதி காலையில் இப்பெரும் பக்தர்கள் கூட்டத்தில் சுவாமி சிதானந்தாஜி உரையாற்றினார், பின்னர் பிரசாதம் வழங்கினார்.

இந்திய ஜனாதிபதி புதிய ஒய் எஸ் எஸ் நூலை வெளியிடுகிறார், நவம்பர் 15

ராஞ்சி ஆசிரமத்தில் நவம்பர் 15-ம் தேதி இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், அதிகாரப்பூர்வமாக, காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: பகவத்கீதை , எனும் நூலின் ஹிந்தி மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இந்நூல், இந்தியாவின் பெரிய பேரன்பிற்குரிய மறைநூலின் மீதான பரமஹம்ஸ யோகானந்தரின் தலைசிறந்த விளக்கஉரையாகும். ஜனாதிபதி ஸ்ரீ கோவிந்துடன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும், முதலமைச்சரும் வந்திருந்தனர்.

2017_சரத்_சங்கம்2_ராஞ்சி_07

சுமார் 300 பேர் அடங்கிய அவையினருக்கு வந்திருந்த பேச்சாளர்களும் முக்கியஸ்தர்களும் அறிமுகப்படுத்தப்படும் போது மேடையில் அனைவரும் நிற்கின்றனர் (இடமிருந்து வலமாக) சுவாமி ஈசுவரானந்தர், சுவாமி நித்தியானந்தர், சுவாமி சிதானந்தாஜி, ஜார்கண்ட் மாநில ஆளுநர் (திருமதி திரெளபதி மர்மு), இந்திய ஜனதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஸ்ரீ ரகுபர் தாஸ், சுவாமி ஸ்மரணானந்தர், சுவாமி விஸ்வானந்தர்.

2017_சரத்_சங்கம்2_ராஞ்சி_04

தேசிய கீத இசையைத் தொடர்ந்து ஸ்ரீ கோவிந்த் மற்றும் பலர் குத்துவிளக்கை ஏற்றுகின்றனர்.

அரசாங்க முக்கியஸ்தர்கள், ராஞ்சி ஆசிரமத்திற்கு மலர்கொத்துக்களும், பொன்னாடைகளும் வழங்கப்பட்டு வரவேற்கப்படுகின்றனர்

2017_சரத்_சங்கம்2_ராஞ்சி_03(1) கீதா ஹிந்தி

மரியாதைக்குரிய விருந்தினர்களுக்கு கடவுள் அர்ஜுனனுடன் பேசுகிறார் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

(இடது) மாண்புமிகு விருந்தினர்கள்  காட் டாக்ஸ் வித் அர்ஜுனா  உலகத்தை ஆன்மீகமாக எழுச்சியூட்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

(வலது) ஸ்ரீ கோவிந்த் அவையினருக்கு இந்தியில் உரையாற்றி, மேற்கில் இந்தியாவின் ராஜயோக விஞ்ஞானத்தைப் பரப்புவதில் பரமஹம்ஸரின் அளப்பரிய பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டார். அவர் ஒய் எஸ் எஸ்-ஸை, யோகானந்தரது போதனைகளைப் பரப்புவதிலும் மற்றும் அநேக அர்ப்பணிப்புகளிலும் அதன் சேவைகளைப் பாராட்டினார்.

இந்திய_ஜனாதிபதியின்_ராஞ்சி_ஆசிரமத்திற்கு_வருகை புரிதல்

அநேக ஊடக அமைப்புகள் இந்திய ஜனாதிபதியின் ராஞ்சிஆசிரம விஜயத்தைப் பற்றி செய்திகள் வெளியிட்டன. இந்நிகழ்ச்சி பற்றிய கட்டுரை இந்திய பத்திரிக்கை  ‘தி டெலகிராப்’ -ல் நிகழ்ச்சி நடந்த மறுநாள் வெளியானது.

எஸ் ஆர் எஃப் சர்வதேச தலைமையகத்திற்கு திரும்புதல், நவம்பர் 18

சுவாமி சிதானந்தாஜியும் அவரது குழுவும் தங்கள் இல்லமான எஸ் ஆர் எஃப் சர்வதேச தலைமையகத்திற்கு திரும்பினர். அங்குள்ள அவர்களது சக சன்னியாசிகளால் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

இதைப் பகிர