குரு என்பவர், சீடரில் உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை விழித்தெழச் செய்யும், விழிப்புணர்வடைந்த இறைவன் ஆவார்…. குருவே எல்லா மனிதர்களிலும் உள்ள கொடையாளிகளில் ஆகச் சிறந்தவர். இறைவனைப் போலவே, அவருடைய பெருந்தகைமைக்கும் எல்லையே இல்லை.
— பரமஹம்ஸ யோகானந்தர்
குரு பூர்ணிமா ஒவ்வொரு YSS பக்தரின் ஆன்மீக வாழ்க்கையிலும் ஒரு புனித நாளைக் குறிக்கிறது, இது நமது குரு ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், ஆழந்த குரு-சிஷ்ய உறவை கௌரவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த புனித சந்தர்ப்பத்தை நினைவுகூரும் வகையில், YSS சன்னியாசி வழி நடத்திய ஒரு சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆன்மீக ரீதியில் வளப்படுத்தும் நிகழ்வில் ஒரு கூட்டு தியானம், பக்திபூர்வ கீதம்பாடுதல் மற்றும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவு ஆகியவை இருந்தன.
அனைத்து YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் இந்த சந்தர்ப்பத்தில் நேரில் நிகழ்ச்சிகளை நடத்தின.
மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆராயலாம்:
குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் YSS குரு பரம்பரை குருமார்களின் அநேக அருளாசிகளுக்காக உங்கள் அன்பு, விசுவாசம் மற்றும் நன்றியை வெளிப்படுத்த விரும்பினால், கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் காணிக்கை செலுத்தலாம்: