YSS நொய்டா ஆசிரமத்திலிருந்து
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் உரை

ஞாயிறு, பிப்ரவரி 26, 2023

காலை 11:00 மணி

– மதியம் 12:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

பிப்ரவரி 26 ஆம் தேதி நொய்டா ஆசிரமத்தில் YSS/SRF இன் தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி ஒரு உத்வேகமளிக்கும் உரை நிகழ்த்தினார். இந்த நேரடி ஒளிபரப்பு உரையை YSS வலைத்தளம் அல்லது யூடியூப் சேனலில் காணலாம்.

“த ட்ரேன்ஸ்ஃபர்மேடிவ் பவர் ஆஃப் க்ரியா யோகா” என்ற இந்த சொற்பொழிவில், கிரியா யோகப் பாதையின் அனைவருக்குமான உத்திகள் மற்றும் கோட்பாடுகளை நேர்மையுடனும் ஏற்கும் திறனுடனும் பயிற்சி செய்யும் போது நம் வாழ்க்கையில் புகும் ஆன்மீக நன்மைகளைப் பற்றி சுவாமிஜி உரை நிகழ்த்தினார்.

பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். பக்தியுடனான கீதமிசைத்தல் அமர்வு இதற்கு முன்னதாக நடைபெற்றது.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர