YSS ஆசிரமங்களில்
SRF 2025 உலகப் பேரவை திரையிடல்

(ராஞ்சி, தக்ஷிணேஸ்வர், நொய்டா, சென்னை, துவாரஹாத்)

திங்கள், ஜூன் 23, 2025 – ஞாயிறு, ஜூன் 29, 2025 (IST)

நிகழ்வு பற்றி

நான் ஒரு கும்பலை விட ஒரு ஆன்மாவை விரும்புகிறேன், ஆனால் நான் ஆன்மாக்களின் கூட்டத்தை நேசிக்கிறேன்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

YSS பக்தர்களுக்காக YSS ஆசிரமங்களில் ஒரு சிறப்பு ஆன்மீகக் கூட்டம் நடைபெற்றது, அங்கு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) உலகப் பேரவை 2025 இன் ஆன்மீக நிகழ்ச்சிகள் திரையிடப்பட்டன. இந்தத் தனித்துவமான வாய்ப்பு, பக்தர்களுக்கு, ஒரு YSS ஆசிரமத்தின் புனிதச் சூழலில் தங்கியிருந்தபடியே, பேரவையின் ஆன்மீக ரீதியாக மேம்படுத்தும் அதிர்வுகளில் மூழ்கித்திளைய வழிவகுத்தது.

SRF உலகப் பேரவை என்பது பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகளில் ஆழ்வதற்கு உலகெங்கிலும் உள்ள உண்மையைத் தேடும் சாதகர்களை ஒன்றிணைக்கும் வருடாந்திர நிகழ்வாகும். 2025-ஆம் ஆண்டுப் பேரவை, ஆன்மீக வளம் நிறைந்த ஒரு வார கால நிகழ்ச்சித் திட்டத்தை வழங்கியது. அதில் பின்வருவன அடங்கும்:

  • YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்தகிரியுடன் சிறப்பு தியானம் மற்றும் சத்சங்கம்
  • கூட்டு தியனாங்கள்
  • பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் ஞானம் குறித்த சன்னியாசிகளின் உத்வேகம் தரும் சத்சங்கங்கள்
  • YSS/SRF தியான உத்திகள் குறித்த வகுப்புகள் — சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், ஹாங்-ஸா மற்றும் ஓம் உத்திகள் குறித்த ஆழமான அறிவுறுத்தல்.
  • ஆன்மாவை உயர்த்தவும் பக்தியை ஆழப்படுத்தவும் கீர்த்தனங்கள் மற்றும் பக்திபூர்வமாக இசைத்தல் அமர்வுகள்.
  • வீடியோ விளக்கக்காட்சிகள்

இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்வு ராஞ்சி, நொய்டா, தக்ஷிணேஸ்வர், சென்னை மற்றும் துவாரஹத் YSS ஆசிரமங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இது YSS பக்தர்களுக்கு, ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சியடையவும், குருதேவரின் போதனைகள் குறித்து ஆழ்ந்த புரிதலைப் பெறவும், மற்றும் தியானப் பயிற்சிகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளித்தது. YSS சன்னியாசிகள் காலை மற்றும் மாலை நேரக் கூட்டுத் தியானங்கள் நடத்தினர், மேலும் ஆன்மீக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை அளித்தனர்.

YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஸ்வாமி சிதானந்தஜியின் 2024 SRF உலக பேரவை உரையில் பக்தர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி நிரலின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

நாள் I: திங்கள், ஜூன் 23

காலை 06:30 மணி முதல் 07:50 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரை
தொடக்க சத்சங்கம்: வாழ்க்கையை ஓர் ஆன்மீக சாகசப் பயணமாக்குதல்

காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை
சத்சங்கம் — பேரவை வாரத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது

மதியம் 03:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
வீடியோ காட்சி

மாலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

நாள் II: ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

காலை 07:00 மணி முதல் 08:30 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
ஹாங்-ஸா உத்தி மறு ஆய்வு

காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை
சத்சங்கம் — தளர்த்தும் கலை: மன அழுத்தத்தைப் போக்குதல் மற்றும் உண்மையான அமைதியை உணர்தல்

மதியம் 03:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மறு ஆய்வு

மாலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

நாள் III: ஜூன் 25, புதன்கிழமை

காலை 07:00 மணி முதல் 8:30 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
ஓம் உத்தி மறு ஆய்வு

காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை
சத்சங்கம் — நமது உன்னத லட்சியங்களை வெளிக்கொணர்தல்: தொடக்க முயற்சியின் படைப்பாற்றல்மிக்க சக்தி

மதியம் 03:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
சத்சங்கம் — கேள்விகளுக்கான பதில்கள்

இரவு 08:30 மணி முதல் 11:30 மணி வரை
ஸ்வாமி சிதானந்தாஜி அவர்களுடன் தியானம்

நாள் IV: வியாழன், ஜூன் 26

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
சத்சங்கம் — கேள்விகளுக்கான பதில்கள்

காலை 11:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
YSS சன்னியாசி ஒருவர் நடத்தும் வழிநடத்தப்படும் தியானம்

மதியம் 03:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
சத்சங்கம் — உலகின் சிறந்த குடிமக்களாக ஆகுதல்

மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை
கீர்த்தனத்துடன் தியானம்

நாள் V: வெள்ளிக்கிழமை, ஜூன் 27

காலை 07:00 மணி முதல் 08:30 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை
சத்சங்கம் — கேள்விகளுக்கான பதில்கள்

காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை
சத்சங்கம் — ஒருவரின் ஆன்மீகத் தேடலில் குருவின் பங்கு

மதியம் 02:30 மணி முதல் மாலை 04:00 மணி வரை
கீர்த்தனம்

மாலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

நாள் VI: சனிக்கிழமை, ஜூன் 28

காலை 06:30 மணி முதல் 07:50 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரை
ஸ்வாமி சிதானந்தாஜியின் சத்சங்கம்: பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகள்

காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
கிரியா யோகா மறு ஆய்வு மற்றும் சரி பார்ப்பு

மதியம் 03:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
YSS சன்னியாசிகளுடன் தோழமை

மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை
வழி நடத்தப்படும் தியானம்

நாள் VII: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 29

காலை 07:00 மணி முதல் 08:30 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை
கீர்த்தனம்

காலை 11:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
சத்சங்கம் — ஆன்மீக முன்னேற்றத்திற்கான அகச் சூழலை உருவாக்குதல்

நண்பகல் 12:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
நிறைவுக் குறிப்புகள் மற்றும் பிரசாதம்

மாலை 04:00 மணி முதல் 07:30 மணி வரை
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

முன்பதிவுகள் மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்

ராஞ்சி

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி, ஜார்க்கண்ட் – 834 001

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை)
மின்னஞ்சல்: helpdesk@yssi.org

தக்ஷிணேஸ்வர்

யோகதா சத்சங்க ஆசிரமம் — தக்ஷிணேஸ்வர்
21, யு. என். முகர்ஜி ரோடு, தக்ஷிணேஸ்வர்
கொல்கத்தா, மேற்கு வங்கம் – 700 076

தொலைபேசி: (033) 25645931, (033) 25646208
மின்னஞ்சல்: yssdak@yssi.org

நொய்டா

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — நொய்டா
பரமஹம்ஸ யோகானந்தா மார்க், B–4, செக்டார் 62
கௌதம் புத்தா நகர், உத்தரபிரதேசம் – 201 307

தொலைபேசி: +91 9899811808, +91 9899811909 
மின்னஞ்சல்: noidaashram@yssi.org

சென்னை

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை
மன்னூர் கிராமம், P.O. வள்ளர்புரம்
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு – 602 105

தொலைபேசி: +91 7550012444, +91 7305861965 
மின்னஞ்சல்: chennaiashram@yssi.org

துவாரஹாத்

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – துவாரஹாத்
துவாரஹாத்
அல்மோரா, உத்தரகண்ட் – 263 653

தொலைபேசி: +91 9756082167, +91 9411708541
மின்னஞ்சல்: yssdwtaccom@gmail.com

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர