இளம் சாதகர் சங்கம்

(ராஞ்சி ஆசிரமம்)

புதன்கிழமை, 10 செப்டம்பர், 2025 – ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

நிகழ்வு பற்றி

மனமும் உணர்வும் உள்முகமாகத் திசைதிருப்பப் படுகையில், அவனது ஆனந்தத்தை உணரத் தொடங்குகிறீர்கள். புலன்களின் இன்ப நுகர்வுகள் நீடிக்காதவை; ஆனால் இறைவனது ஆனந்தம் என்றும் நீடித்திருக்கும். அது ஒப்புவமையற்றது!

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு புதிய திட்டம் மலர்கிறது

முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடக்க முயற்சியாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) இளம் சாதகர்களுக்காக (வயது 23-35) பிரத்யேகமாக சாதனா சங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தது — இது செப்டம்பர் 10 முதல் 14, 2025 வரை அமைதியான YSS ராஞ்சி ஆசிரமத்தில் நடைபெற்ற ஆன்மீகத்தில் ஆழ்ந்து மூழ்கும் ஓர் அனுபவமாக அமைந்தது.

இந்தச் சிறப்பு சங்கம், பரமஹம்ஸ யோகானந்தரின் அகத் தெளிவு மற்றும் சக்திக்கான உலகளாவிய போதனைகளின் மீது இளைஞர்களிடையே வளர்ந்து வரும் ஆர்வத்தின் ஒரு வெளிப்பாடாக அமைந்தது.

இந்தியா முழுவதிலும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான இளம் சாதகர்கள் ஒன்றுகூடி, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை ஆழ்ந்து அறிந்து கொள்ளவும், ஆத்மார்த்தமான நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், மற்றும் விரைவான நவீன உலகிற்கு ஏற்ற ஒரு சமநிலையான ஆன்மீக வாழ்க்கை முறையைக் கண்டறியவும் ஒரு புனிதமான இடத்தை வழங்கியது.

யோக வாழ்க்கை முறைக்கு ஊட்டமளிக்கும் ஆன்மீக நடைமுறை

யோகானந்தரின் சமநிலை வாழ்க்கை லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு, சங்கத்தின் போது நாள்தோறும் பின்பற்றப்பட்ட வழக்கங்கள் எளிமையானதாக இருந்தபோதிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன: தியானங்கள் மற்றும் கீர்த்தனைகள், சுவாரஸ்யமான வகுப்புகள் மற்றும் பயிலரங்குகள், மகிழ்ச்சியளிக்கும் சேவைப் பணிகள், எழுச்சியூட்டும் சத்சங்கங்கள், YSS பாடங்கள் கற்றல், சுய ஆய்வு மற்றும் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் தோழமைக்கான நேரம்.

இந்த முழுமையான யோக வாழ்க்கை முறை, இளம் சாதகர்களுக்காகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது — இதை அவர்கள் தங்கள் வாழ்வில் உள்வாங்கி, தங்களுடையதாக்கிக் கொள்ள முடியும்.

சங்கத்தின் சிறப்பம்சங்கள்

இந்த நிகழ்ச்சி, YSS தியான உத்திகள் மறு ஆய்வு மற்றும் வழிநடத்தப்படும் பயிற்சியை உள்ளடக்கியது என்றாலும், புதிய அம்சங்கள், குறிப்பாக இளம் சாதகர்களுக்காகப் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் அடங்கியிருந்தவை:

  • கூட்டுத் தியானங்கள் மற்றும் கீர்த்தனைகள்
  • புனித YSS தியான உத்திகளின் மறு ஆய்வு மற்றும் வழிநடத்தப்படும் பயிற்சி வகுப்புகள்
  • பாடங்களை இணைந்து படித்தல் மற்றும் அக ஆய்வு
  • குருஜியின் போதனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடு குறித்த ஊக்கமளிக்கும் சத்சங்கங்கள்
  • பின்வரும் தலைப்புகளில் செயல்முறை பயிலரங்குகள் மற்றும் கலந்துரையாடல் குழுக்கள்
    • ஆன்மீக விவேகத்துடன் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுத்தல்
    • வேகமான உலகில் அக சமநிலையைக் கண்டறிதல்
    • கனிவுடனும் பரிவுடனும் உறவுகளைப் போற்றுதல்
    • வெற்றியின் விதிமுறையைப் பயன்படுத்துதல்
  • ராஞ்சிக்கு அருகிலுள்ள ஒரு இயற்கை இடத்திற்கு சுற்றுலா
  • ஹத யோகா அமர்வுகள், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள்
  • பிற இளம் சாதகர்களுடன் தோழமை

வகுப்புகளும் உரைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டன. கிரியா யோக தீட்சை நிகழ்ச்சி இல்லாவிட்டாலும், கிரியா யோக உத்தி குறித்த மறு ஆய்வு வகுப்பு நடத்தப்பட்டது.

உங்கள் நிதி உதவி பாராட்டப்படுகிறது

இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் ஏற்படும் பல்வேறு செலவினங்களை ஈடுசெய்வதற்காக நாங்கள் பங்களிப்புகளைக் கோருகிறோம். பதிவுக் கட்டணம் மானியமாக வழங்கப்படுகிறது, இதனால் குறைந்த வசதி உள்ள பக்தர்கள் கூட பங்கேற்க முடியும். தாராளமாக நன்கொடை வழங்க இயன்றோர்க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், இது இந்த மானியத்தை வழங்கவும், அதன் மூலம் குருதேவரின் உபசரிப்பை அனைத்து நேர்மையான சாதகர்களுக்கும் நீட்டிக்கவும் வழிவகுக்கிறது.

பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி 834 001

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை)
மின்னஞ்சல்: helpdesk@yssi.org

இளைஞர்களுக்கான எங்களது திட்டங்கள் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், youthservices@yssi.org என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர