கோவிட்-19 நிவாரணப் பணிக்கான வேண்டுகோள்

9 ஏப்ரல், 2020

மனிதகுலம் உலகளாவிய கோவிட்-19 நெருக்கடியால் தற்போது அறைகூவல் விடப்பட்டிருக்கிறது. நமது தினசரி பிரார்த்தனைகளுடன் உலகைத் தழுவிக்கொள்வதற்கும், குருதேவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்கும் இது ஒரு முக்கியமான தருணம்: “வாழ்க்கை சேவையை முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும்”, இந்த ஆற்றலுருவில் சேவை செய்யும் ஒரு வாய்ப்பினை நாம் பெற்றிருக்கிறோம். மேலும் தற்போதைய நெருக்கடியால் மிகவும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள முக்கியமாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் கிராமப்புற மக்கள் போன்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற, உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் இருக்கின்ற ஏழைகளையும் துணையற்ற நிலையிலிருப்பவர்களையும் சென்றடைவதற்கான எங்கள் முயற்சிகளில் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறோம். இந்தக் காலகட்டத்தின் தேவை, உயிர்களைக் காப்பாற்ற பாதுகாப்பையும் மருந்துகளையும் வழங்குதல் மற்றும் இந்தக் கட்டுப்பாடுகளால் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பது.

இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான தனது முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எழுச்சியூட்டும் அழைப்பிற்கு பதிலளித்தவாறு ஒய் எஸ் எஸ் இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கான நாடு தழுவிய முயற்சிகளில் இணைந்து கொண்டது. முழுக்க முழுக்க தன்னார்வ நன்கொடைகளால் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பாக, முன்னெப்போதையும் விட இப்போது, ஒருவரது இன்னும் பெரிய ஆன்மாவாக மனித குலத்திற்குச் சேவை செய்தல் என்ற குருதேவரின் இலட்சியத்தைத் தொடர்ந்து ஆதரிக்க நமது பக்தர்களை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.

சுகாதார சேவையைப் பெற முடியாதவர்கள் அல்லது லாக்டவுன் முடக்கம் காரணமாக தினசரி ஊதியத்தை சம்பாதிக்க முடியாதவர்கள் போன்று, இந்த நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிற ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்களைச் சென்றடைவதே நமது குறிக்கோள். முதியவர்கள், அனாதைகள், தினக்கூலித் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் தொழுநோய் காலனிகளில் உள்ள நோயாளிகள் போன்ற சமூகங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவுவதற்காக நமது ஆசிரமங்கள் மற்றும் நம்முடைய சில முக்கிய மையங்கள் அமைந்துள்ள உள்ளூர் நிர்வாகங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, அவற்றை அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த மக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம். மருந்துகள், சோப்புகள், சானிடைசர்கள் மற்றும் முக உறைகள் எனும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் அத்தியாவசியத் தொகுதியில் சேர்க்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

இந்த உன்னத பணிக்கு பங்களிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் நன்கொடை அளிக்கலாம்.  . நாங்கள் தற்போது ஆன்லைன் நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஒரு தொண்டு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். சொஸைடிக்கான நன்கொடைகளுக்கு (PAN: AAATY0283H) அந்தச் சட்டத்தின் 80-ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

If you have any queries regarding the donation procedure, or are having difficulties in donating online, or are interested in supporting our relief activity in some other way, please contact Ranchi Help Desk via email helpdesk@yssi.org or by phone: +91 (651) 6655 555 (Mon-Sat: 9 am to 4.00 pm).

Another way all YSS devotees can contribute at this time is by joining the YSS sannyasis and the Worldwide Prayer Circle in praying daily for all those who have requested prayers, and for the health and well-being of all humanity. You can find more details by visiting our webpage.

May we draw inspiration from our beloved Gurudeva’s words: “In being of spiritual, mental, and material service to others, you will find that, without seeking, your own needs will be fulfilled.”

We pray that you remain safe, and also ensure the safety of others by diligently following all the guidance that has been given by medical experts and the Government. In so doing, and thereby manifesting care and concern for all, you will be most pleasing to God and the Great Gurus.

May the halo of God’s all protecting love surround you and your dear ones always.

இதைப் பகிர