“பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து ஞானம் கற்பது எப்படி” — ஸ்ரீ மிருணாளினி மாதா கூறிய கதை

09 நவம்பர், 2023

2011 முதல் 2017-இல் அவர் மறையும் வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்-இன் சங்கமாதா மற்றும் நான்காவது தலைவராகப் பணியாற்றிய ஸ்ரீ மிருணாளினி மாதாவின் இந்த வலைப்பதிவு இடுகை, ஜனவரி – மார்ச் 2017 யோகதா சத்சங்க இதழில் வெளியான “த சைன்ஸ் ஆஃப் ஸ்பிரிசுவல் ஸ்டடி அண்ட் த ஆர்ட் ஆஃப் இன்ட்ராஸ்பெக்ஷன்” என்ற அவரது கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.

இங்கு என்சினிடாஸில் [ஆசிரமத்தில்] வாழும் இளைய சீடர்களாகிய எங்களது குழு ஒன்று இருந்தது. ஞாயிறு காலைகளில், மாஸ்டர் [பராமஹம்ஸ யோகானந்தர்] சான் டியாகோ ஆலயத்தில் (லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் கோயிலிலும் இதிலும் மாறி மாறி) ஒவ்வொரு வாரமும் சொற்பொழிவு ஆற்றும்போது, நாங்கள் கலந்து கொள்வோம்.

அவர் தனது விரிவுரைகள் அல்லது வகுப்புகளை வழங்கும்போது குறிப்புகளை எடுக்க எங்களை ஊக்குவித்தார். பின்னர், அந்த வாரத்தில், நாங்கள் ஒவ்வொரு மாலையும் ஆசிரம வரவேற்பறையிலோ அல்லது சாப்பாட்டு அறை மேஜையைச் சுற்றியோ கூடி, குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நாங்கள் ஒவ்வொருவரும் அவருடைய உரையிலிருந்து திரட்டியதை நினைவுபடுத்திக் கூறி, அதைப் பற்றி விவாதிப்போம். அதன் பிறகு, நாங்கள் ஒவ்வொருவரும் சொந்தமாக, சொந்த எண்ணங்களில் அவர் வழங்கிய போதனைகளை எழுதுவோம். அந்த போதனையை எங்கள் சொந்த வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்க முடியும் என்பதை அறிய சுயஆய்வு செய்வோம்.

இவ்வாறாக நாங்கள் ஒரு முழு வாரமோ, அல்லது இரண்டு வாரங்களோ, மாஸ்டரின் ஒரு வகுப்பின் உரை, ஒரு நாள் ஆற்றிய சொற்பொழிவுகள்-இல் செலவிடுவோம். குருவின் ஞானத்தையும் வழிகாட்டுதலையும் எவ்வாறு உள்வாங்குவது என்பது மட்டுமல்லாமல், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் அது எங்களுக்குக் கற்றுத் தந்தது.

சில சமயங்களில் தொடர்ந்து வந்த வாரத்தில் குருதேவர் என்சினிடாஸுக்கு திரும்பி வரும்போது, நாங்கள் எங்கள் கற்றலை விவாதித்துக் கொண்டிருக்கும் சமயம் அவர் அறைக்குள் நுழைவார். இயல்பாகவே குருவின் முன்னிலையில் எங்கள் “ஞானத்தை” விளக்குவதில் எங்களுக்கு வெட்கமாக இருந்தது!

ஆனால் அவர் உட்கார்ந்து, “இல்லை, இல்லை, மேலே செல்லுங்கள்; தொடருங்கள்.” நாங்கள் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். நாம் எவ்வளவு உள்வாங்கிக்கொண்டோம் என்பதைப் பார்க்க, ஒரு பள்ளிப் பேராசிரியரைப் போலவே அவர், “நான் இதைப் பற்றி என்ன சொன்னேன்?” அல்லது “அதைப் பற்றி நான் என்ன சொன்னேன்?” “நான் பயன்படுத்திய அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?” என்று எங்களைக் கேள்வி கேட்பார்.

எங்களுக்கு எல்லாமே புரிந்ததில்லை என்று என்னால் சொல்ல முடியும்! நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, இளைய ஆசிரமவாசிகளான எங்களை ஆலயத்தில் சபை முன் வரிசையில் அமர வைப்பார். மேலும் அவர் உரையாற்றும் போது, சில ஆழமான அல்லது சிக்கலான தத்துவக் கருத்தை கூற வேண்டிய சமயத்தில், அவர் தனது பேச்சை இடைமறித்து, பேச்சாளர் மேடையில் இருந்து எங்களைப் பார்த்து, “உங்களுக்குப் புரிந்ததா?” என்று கேட்பார்.

“அவர் யாரிடம் பேசுகிறார்?” அல்லது “அவர் சொல்வதற்கும் அந்தச் சிறு குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சபையில் இருந்த மற்றவர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.

அவர் இரண்டு பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார், தனக்கு கீழ் கற்கும் தனது இளம் சீடர்களுக்கு ஒரு குருவாகவும், மேலும் இந்த உண்மைகளை பெரும்பாலான மக்களுக்கு வழங்கி கொண்டிருந்த ஜகத்குரு—உலக ஆசான்—ஆகவும் இருந்தார்.

மாஸ்டர் எங்களுடன் இருந்தபோது, அவர் எங்களை வழிநடத்தினார். நாங்கள் தவறு செய்து கொண்டிருந்தபோது அவர் சில வார்த்தைகள் மூலம் அல்லது ஒரு அமைதியான ஆனால் அர்த்தமுள்ள பார்வையால் கூட எங்களிடம் கூறினார். சரியாக நடந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார்.

இந்த விஷயங்களை நமக்குச் சுட்டிக் காட்ட அவர் இப்போது ஸ்தூல வடிவில் இல்லை. ஆனால், அவர் எங்களிடம் கூறியது போல, “நான் சென்ற பின்னர் போதனைகளே குருவாக இருக்கும் YSS [SRF] போதனைகளின் வாயிலாக நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய குருமகான்களுடனும் ஒத்திசைந்து இருப்பீர்கள்.”

அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை இப்போது நான் உணர்கிறேன், ஏனென்றால் பரமஹம்ஸரின் போதனைகளை அவரது படைப்புகளிலிருந்தும், YSS [SRF] பாடங்களிலிருந்தும் நாம் முழுமையாக உள்வாங்கிக் கொண்டால், அவை தொடர்ச்சியான உத்வேகத்திற்கு மட்டுமல்ல, நமக்கு தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கும் ஆலோசனைக்கும் ஆதாரமாக இருப்பதைக் காண்கிறோம்.

நமக்கு வழிகாட்டுதல் தேவைப்படும்போது, நம்மை ஏமாற்றவோ அல்லது சோதிக்கவோ முயற்சிக்கும் மாயையின் சில சக்திகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு தேவைப்படும்போது, குருவின் போதனைகளில் உள்ள வார்த்தைகள் அவற்றை நம்முடைய ஒரு பகுதியாக ஆக்கியிருந்தோமானால், அவை நமக்கு உதவியாக இருக்கும்.

கீழே உள்ள இணைப்பில் நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் தியான விஞ்ஞானம் மற்றும் சமநிலை ஆன்மீக வாழ்க்கை கலை குறித்த விரிவான வீட்டுக் கல்வி திட்டமாகிய யோகதா சத்சங்க பாடங்கள் பற்றி மேலும் அறியலாம். பரமஹம்ஸர், கிரியா யோக தியான உத்திகளையும் ஒரு முழுமையான வாழ்க்கை முறையையும் முன்வைக்கும் தனது போதனைகளின் மையமாக பாடங்களை கற்பனை செய்தார். இதனால் சாதகர்கள் அவரது அறிவுறுத்தல்களிலிருந்து நேரடியாக அவரது ஞானத்தை உள்வாங்கிக் கொள்ளவும், ஆன்மீக பாதையில் அவரது தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறவும் முடியும்.

இதைப் பகிர