மனிதன் தெய்வீகத்தில் நிலை பெறாத வரையில் மனித நடத்தையை நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
ஸ்வாமி ஸ்ரீ யுதேஸ்வர்ஜி ஒரு ஞானாவதாரம் அல்லது “ஞானத்தின் அவதாரம்” என்று போற்றப்படுகிறார். யுதேஸ்வர்ஜி -இன் மகாசமாதி தினத்தை (முக்தி அடைந்த யோகியின் தேகத்தில் இருந்து அவரின் இறுதி உணர்வுபூர்வ வெளியேற்றம்.) முன்னிட்டு YSS சன்னியாசி ஒருவர் ஆங்கிலத்தில் சிறப்பு தியானம் வழி நடத்தினார்.
மார்ச் 9, சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆன்மீக எழுச்சியூட்டும் நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், ஊக்கமளிக்கும் வாசிப்பு, மற்றும் தியானம் ஆகியவை இருந்தன.
இந்த ஆன்லைன் நிகழ்ச்சிக்கு கூடுதலாக, நமது ஆசிரமங்கள் மற்றும் மையங்களிலும் பல்வேறு நினைவு தின நிகழ்ச்சிகள் நேரில் நடத்தப்பட்டன.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
தங்கள் வாழ்க்கையில் பல அருட்கொடைகள் பொழிந்த குருவுக்கு, இந்த சிறப்பு நாளில், பக்தர்கள் தங்கள் நன்றியுணர்வின் அடையாளமாக குரு-காணிக்கை சமர்ப்பிக்கிறார்கள். நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் இந்த காணிக்கையை செலுத்தலாம். உங்கள் மதிப்புமிக்க நன்கொடை YSS/SRF குருமார்களின் கிரியா யோக போதனைகளை பரப்புவதற்கு பயன்படுத்தப்படும்.