தியானத்தின் வாயிலாக ஆன்மீகக் கண்ணின் தெய்வீக ஒளியுடன் தொடர்பு கொள்ளுதல் – மற்றும் கீதமிசைத்தல், மனக் காட்சி காணுதல்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது குரு பரம்பரை குருமார்கள் போதித்த தியானப் பயிற்சியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியானது , உடலில் ஆன்மீகக் கண் அல்லது கூடஸ்த அல்லது கிறிஸ்து உணர்வுநிலை மையம் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் மென்மையாக கவனத்தையும் பார்வையையும் வைப்பதாகும். உடலில் உள்ளுணர்வு மற்றும் தெய்வீக உணர்தலின் மையமான ஆன்மீகக் கண்ணின் முக்கியத்துவத்தை பரமஹம்ஸர் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். இது இயேசுவாலும் இவ்வாறு சொல்லப்படுகிறது: “எனவே உன் கண் ஒன்றானால், உன் சரீரம் முழுவதும் ஒளி நிறைந்திருக்கும்” (மத்தேயு 6:22). “த டீபர் டீச்சிங்ஸ் ஆஃப் ஜீஸஸ் கிறைஸ்ட்’ என்ற தலைப்பில் SRF சன்னியாசி ஸ்வாமி சரளானந்தா சமீபத்தில் வெளியிட்ட உத்வேகமூட்டும் வீடியோ இதை சிறப்பாக விவரிக்கிறது.

ஆன்மீகக் கண் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை நீங்கள் கீழே படிக்கலாம் மேலும் உங்கள் வாழ்வையும், உணர்வுநிலையையும் மேலும் ஒளிமயமாக்கி, அதன் மூலம் உலகிற்கு ஒளி ஏற்றிட இந்த மேன்மை தரும் ஆன்மீக மையத்துடன் தொடர்பு கொள்வதற்கான சில வழிமுறைகளை பயிற்சி செய்யலாம் – (இது ஆன்மீக பாதையில் உண்மையிலேயே ஆழமான ஒரு விஷயமாக இருப்பதால், இப்பக்க அடிப்பகுதியில் மேலும் படிப்பதற்காக சில தகவல் வளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.)

ஆன்மீகக் கண் ஒரு "நீலமயச் சுடர்" என்று—கீதம் பாடுவதன் மூலம் ஒன்றுபடுதல்

பரமஹம்ஸ யோகானந்தர் ஆன்மீகக் கண்ணைப் பற்றி “நீலமயச் சுடர்” என்ற தலைப்பில் ஒரு கீதம் இயற்றினார் (இது அவரது பிரபஞ்ச கீதங்கள் புத்தகத்தில் காணலாம்).

பரமஹம்ஸர் நிறுவிய YSS/SRF, முழு-நாள் கிறிஸ்துமஸ் தியானத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் சமயத்தில் பெரும்பாலும் பாடப்படும் இந்த கீதம், நெற்றியில் உள்ள ஆன்மீக கண்ணின் “வாயில்” ஊடாக பக்தர் செல்லும் பாதையை விவரிக்கிறது.

யோகி ஆன்மீகக் கண்ணை நீல நிறக் கோளத்தைச் சுற்றிய பொன்னிற ஒளியின் வளையமாக காண்கிறார்; நடுவில், ஒரு பிரகாசமான வெண்ணிற நட்சத்திரம். (யோவான் ஸ்நானகரால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, நட்சத்திர ஆன்மீக கண்ணை “வானுலகத்திலிருந்து புறாவைப் போல இறங்கும் பரம்பொருள்” ஆக அவர் பார்த்ததாக பரமஹம்ஸர் விளக்கினார். அதன் “சிறகுகள்” நீலம் மற்றும் பொன்னிற கதிர்களின் ஒளிவட்டங்களைக் குறிக்கின்றன.)

பக்தியாலும் YSS பாடங்களில் கற்பிக்கப்படும் கிரியா யோக தியான விஞ்ஞானம் போன்ற பிராணாயாம (உயிர்சக்தி கட்டுப்பாடு) உத்திகளாலும் நட்சத்திர வாயிலைக் கடந்து செல்பவர்கள் படைப்பு முழுவதையும் ஊடுருவும் கிறிஸ்து உணர்வுநிலையுடன் (கூடஸ்த சைதன்யா) தொடர்பு கொள்கிறார்கள்.

ஆன்மீகக் கண்ணின் தெய்வீக ஒளியை மனக்காட்சியாகக் காணவும், தொடர்பு கொள்ளவும் உதவும் இந்தப் பாடலை (உரக்க அல்லது மனரீதியாக) இணைந்து பாட உங்களை அழைக்கிறோம்.

“நீலமயச் சுடர்”

நீலமய ஒளி காணில், விரட்டிடு இருளை,
கலைத்துன் மௌனத்தை பிராணாயாம வாளால்.

நீலக்கண் தாரையூடே எங்கும் காண் கிறிஸ்துவை,
துயின்று அணுவில், புரோட்டானில், எலக்ட்ரானில்.

தங்கமய ஒளி வட்டம் நீல வாயிலை அழகூட்டும்;
நீலத்துள் தாரையூடே, எங்கும் காண் கிறிஸ்துவை.

ஒளிச்சிறகு தாரைப் புறா அமர்ந்தது நெற்றியில்,
காட்டுதே கிறிஸ்துவை இதயத்தின் அமைதியில்.

கண்களையோர் சுடராக்கு தாரை வாயிலைக் கண்டிடு;
உன்னுடல் ஒளியாகி படைப்பெல்லாம் ஒளிரும்.

ஞானத்தின் எழுச்சியால், தாரை விழியின் வழியில் செல்,
உன்னான்மத்தில் காண கிறிஸ்துவின் பிறப்பை.

சுடர்ச் சிறகு தாரைப் புறா, உன்னொளியில் தீட்சை தாராய்,
கிறிஸ்துவுடன் என்னான்மத்தை ஆனந்தத்தில் பரவச செய்.

புவிக்கூட ஒளிரும் வாயில், தாரையுன்னூடே காண்பேன்
அனைத்தையும் உயிரூட்டும் விண்ணொளி உலகினுள்.

நீலமய ஒளி காணில், விரட்டிடு இருளை!

 

ஆன்மீகக் கண் மீதான வழிநடத்தப்பட்ட மனக்காட்சி காணும் பயிற்சி மற்றும் தியானம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்-இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி ஆன்மீகக் கண் மீதான உணர்தலையும், தியானத்தையும் வழி நடத்துகிறார். இந்த வழிநடத்தப்பட்ட மனக்காட்சி காணும் பயிற்சி மற்றும் தியானம் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் “தீபத் திருவிழாவான” தீபாவளி அன்று YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஸ்வாமி சிதானந்தஜி வழங்கிய உரையின் ஒரு பகுதியாகும். (“த இன்னர் செலிப்ரேஷன் ஆஃப் தீவாளி: அவேகனிங் த லைட் ஆஃப் த ஸோல்” என்ற தலைப்பிலான அந்த உரையில், நாம் எவ்வாறு ஆன்ம-விஞ்ஞான யோகத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் உள்ளார்ந்திருக்கும் சர்வ வல்லமை வாய்ந்த தெய்வீக ஒளியின் விழிப்புணர்வை உணர முடியும் என்பதை அவர் ஆழமாக விவரிக்கிறார்.)

அகத்துள் தெய்வீக ஒளியை எழுப்ப, இந்த சக்திவாய்ந்த வழிநடத்தப்படும் தியானத்தைத் தொடங்கும் போது, ஸ்வாமி சிதானந்தஜி “முதலில் நீங்கள் அப்பிரதேசத்தைப் பார்க்கும்போது அது இருளாக மட்டுமே இருக்கக்கூடும், ஆனால் அந்த இருளுக்குப் பின்னால் மானுட வடிவில் பரம்பொருளின் இருப்பைக் குறிக்கும் ஆன்மாவின் ஒளி உள்ளது,” என்று கூறுகிறார்.

Play Video about The Inner Celebration of Diwali

ஆழ மூழ்க வேண்டுமா?

ஆன்மீகக் கண்ணால் சாத்தியப்படும் பல அனுபவ அடுக்குகளைப் பற்றியும், அந்த தெய்வீக ஒளியின் ராஜ்யத்தை அகத்துள் கண்டுணர்வது பற்றியும் நீங்கள் மேலும் அறிய விரும்புகிறீர்களா? இங்கே சில பயனுள்ள ஆதாரங்கள் உள்ளன:

YSS புக் ஸ்டோர் வழியாக கிடைக்கும் பரமஹம்ஸரின் மறைநூல்களின் விளக்க உரைகள் ஆன்மீகக் கண்ணைப் பற்றிய நுண்ணறிவு மற்றும் உத்வேக செல்வத்தைக் கொண்டுள்ளன:

யோகதா சத்சங்க பாடங்கள் என்பது கிரியா யோக தியானம் மற்றும் சமநிலை வாழ்க்கைக் கலை பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் வீட்டுக் கல்வித் தொடராகும், இதன் பயிற்சி ஆன்மீக கண்ணை உணர்வதற்கும், அதன் தெய்வீக வாயில் வழியாக கடந்து செல்வதற்கும் உதவும்.

பயிற்சி செய்வதற்கான சங்கல்பம் - தெய்வீக ஒளியால் நிரப்பப்படுதல்

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: “நான் என் ஸ்தூல கண்களை மூடி, உலகத்தின் சபலங்களை விலக்குவேன். என் சார்பியல் கண்கள் ஒளியாலான ஒரே அகக்கண்ணினுள் திறக்கும் வரை நான் மௌன இருளின் வழியாக உற்று நோக்குவேன். நல்லது மற்றும் தீயதைக் காணும் என் இரு கண்களை ஒன்றாக்கி எல்லாவற்றிலும் இறைவனின் தெய்வீக நன்மையை மட்டுமே காணும் போது, நான் என் உடல், மனம் மற்றும் ஆன்மா அவனது சர்வவியாபக ஒளியால் நிரப்பப்பட்டிருப்பதைக் காண்பேன்.”

இதைப் பகிர