நினைவு தின நீண்ட தியானம்

பரமஹம்ஸ யோகானந்தரை போற்றும் வகையில்
மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரரைப் போற்றும் வகையில்

சனிக்கிழமை, மார்ச் 2, 2024

காலை 7:40 மணி

– மதியம் 2.00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

நான் மறைந்த பின்னர் போதனைகளே குருவாக இருக்கும்…. போதனைகளின் வாயிலாக நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய மகா குருமார்களுடனும் ஒத்திசைந்து இருப்பீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி மற்றும் நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகியோரின் மகாசமாதி விசேஷ நாட்களை நினைவுகூரும் வகையில், மார்ச் 2, சனிக்கிழமை அன்று, YSS சன்னியாசிகள் ஆறு மணி நேர தியானம் நடத்தினார்கள். முக்தி அடைந்த யோகி தேகத்தில் இருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறுவது மகாசமாதி ஆகும்.

இந்த நினைவு தின நீண்ட தியானம் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து உத்வேகம் தரும் வாசிப்புகள், கீதம் இசைத்தல் மற்றும் தியானம். பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் இது முடிவடைந்தது.

மார்ச் 2, சனிக்கிழமை தியான நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு இருந்தது:

  • சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் – காலை 7:40 முதல் 8:00 மணி வரை
  • முதல் பகுதி – காலை 8:00 முதல் 11:00 மணி வரை
  • இரண்டாவது பகுதி – காலை 11:30 முதல் மதியம் 2:00 மணி வரை

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர