ஸ்ரீ தயா மாதா வழங்கிய “ஆன்மாவாக நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துங்கள் – நிரந்தர இளமையானவன்”

9 ஏப்ரல், 2024


ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா 1955 முதல் 2010 இல் அவர் மறையும் வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்-இன் அன்பிற்குரிய சங்கமாதா மற்றும் தலைவராக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவர் எழுதி வந்த கடிதங்கள் பற்பல வருடங்களாக YSS பக்தர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் போற்றுதலுக்குரிய ஆதாரமாக இருந்தன. 2001-இல் முதலில் பகிரப்பட்ட ஒரு கடிதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் இளமைத்தன்மையின் உண்மையான ஆதாரத்தை அன்புடன் நினைவுபடுத்துகிறார், மேலும் அதை நம் வாழ்வில் எவ்வாறு மகிழ்ச்சியுடன் பரவச் செய்யலாம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

அன்பர்களே,

இன்றைய மக்கள் இளமையை நீட்டிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் ஆனால் அவர்கள் இளமையாக தோற்றமளிப்பதற்கும், செயல்படுவதற்கும் புறத்தே கவனம் செலுத்துகிறார்கள். பரமஹம்ஸ யோகானந்தர் இளமை என்பது வாழ்க்கையின் உயிர் சக்தியையும், சாதிக்கும் ஆற்றலையும் உயர்த்தும் ஒரு உணர்வு நிலை என்பதை தனது வாழ்க்கையில் நிரூபித்தார்.

தெய்வீக எண்ணங்களே நடைமுறை நிலையாக இருக்கும் களத்தில் அவர் வாழ்ந்தார், மேலும் நாம் என்னவாக இருக்கிறோம் என்ற உண்மையை, நம் உடலும் மனமும் வெளிப்படுத்துவதற்குக் காரணமான, அந்த எண்ணங்களை வளர்க்கக் கற்றுக் கொடுத்தார்: “ஆன்மாவான நீங்கள், நிரந்தரமாக இளமையானவர். அந்த எண்ணத்தை உங்கள் உணர்வுநிலையில் பதிய வைக்கவும்: ‘நான் ஆன்மா, என்றும்-இளமையான பரம் பொருளின் ஒரு பிரதிபலிப்பு. நான் இளமையுடன், லட்சியத்துடன், வெற்றிபெறும் சக்தியுடன் துடிப்புற்றுள்ளவன்.’”

அன்றாட வாழ்வில் இறைவனைக் கொண்டு வந்தவர்கள் தான் மிகவும் துடிப்பான “உயிருடன்” உள்ளவர்கள்.

இளமைக்கான உடல் ரீதியான வழிமுறைகள் இறைவனின் ஆரோக்கிய விதிமுறைகளின் அடிப்படையில் இருக்கும் வரை, தவிர்க்க முடியாமல் தற்காலிகமாக இருந்தாலும் மதிப்புமிக்கவை. உண்மையான இளமை என்பது உடல் நலத்தைப் பேணுவதை விட அதிக விஷயங்களக் கொண்டது. இது உள்ளிருந்து வெளிப்படும், மனம் மற்றும் சித்தத்தின் உயிர்வீரியம் – இது இறைவனின் சாசுவத சக்தி மற்றும் பேரின்பத்துடன் நமது உள்ளார்ந்த தொடர்பை உணர்தலில பிறக்கும் ஆனந்தம்.

பக்தர்களிடம் ஆன்ம குணமாகிய அந்த இளமை உற்சாகத்தை நான் காண விரும்புகிறேன். இது வாழ்க்கை அனுபவங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் மற்றும் தேக வரம்புகளால் தடைபட மறுப்பது போன்ற நேர்மறை அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

நாம் இளவயதினரோ அல்லது, மூத்த குடிமகனோ, நமது மனதின் திறன்களையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் நமது ஆர்வத்தை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருக்கும்போது, கொடுக்கவும், சேவை செய்யவும் இருதயம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் போது, நம்முடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், நாம் இறைவனை நம்புவதில் உறுதியாக இருக்கும்போது, நாம் உண்மையில் உள்ளார்ந்த “இளமையின் நீரூற்றை” கிரகித்துக் கொள்கிறோம்.

மக்கள் அவரது வயதைக் கேட்டபோது, பரமஹம்ஸர் மகிழ்ச்சியுடன் பதிலளிப்பார்: “எனக்கு வயது இல்லை; என் வயது ஒன்று – எல்லையற்றது.” உங்கள் வெளி வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்; பல பூமிக்குரிய பயணங்களில் நீங்கள் அணிந்திருந்த எண்ணற்ற உடல் ஆடைகளில் இதுவும் ஒன்று.

நாள்தோறும் அவ்வப்போது, குறிப்பாக மனது அகத்துள் தியானத்தில் குவிந்திருக்கும் போது, நீங்கள் இறைவனின் நிரந்தர இருப்பைக் கொண்ட ஒரு ஆன்மா, அவனுடைய நித்திய இளமை மற்றும் அழகுடன் அருளப்பட்ட ஒரு ஆன்மா என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பரமஹம்ஸர் கூறியது போல்: “இறைவனுடன் உங்கள் ஒன்றாகிய தன்மையை உணருங்கள். உங்கள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் அவரது அழியாத தன்மையை பதிவு செய்யும் அவரது மகிமையை உணருங்கள்.

இறைவன் உங்களை நேசிக்கிறான்,

தயா மாதா

இதைப் பகிர