புத்தாண்டு தியானம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31, 2023

பின்னிரவு 11:30 மணி (டிசம்பர் 31)

– அதிகாலை 12:15 (ஜனவரி 1)

(IST)

நிகழ்வு பற்றி

புதிய வருடம் எனும் தோட்டத்தில் நீங்கள் செடிகளை நடுவதற்குப் பொறுப்பாளியானவர் என கற்பனைச் செய்யுங்கள். இந்த மண்ணில் நல்ல பழக்க வழக்கங்கள் என்னும் விதையினை விதையுங்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தரின் கூற்றுப்படி, வரவிருக்கும் ஆண்டில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை கோடிட்டுக் காட்டும், ஒரு புதிய திட்டத்தை அமைத்துக் கொள்ள புத்தாண்டு சரியான சமயம் ஆகும். வரவிருக்கும் ஆண்டிற்கான நமது பயனுள்ள இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை சிந்தனையில் கொள்ள ஏதுவாக, தியானத்துடன் புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரியத்தை அவர் நிறுவினார்.

புத்தாண்டு சிறப்பு தியானம், YSS சன்னியாசி ஒருவரால், டிசம்பர் 31, ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு மணி 11 : 30 — ஜனவரி 1, அதிகாலை 12:15 மணி (IST). வழி நடத்தப்பட்டது.

YSS ஆசிரமங்கள் மற்றும் நமது சில மையங்கள், டிசம்பர் 31 அன்று நேரில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தின.

இந்த புத்தாண்டு தினத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு நீங்கள் பங்களிப்பு செய்யலாம். நன்கொடை அளிக்க கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர