ஜன்மாஷ்டமி நினைவுநாள் தியானம்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2024

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

யார் என்னை எல்லா இடங்களிலும், என்னில் எல்லாவற்றையும் காண்கிறானோ அவனது காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை.

— காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதா (VI:30)

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான ஜன்மாஷ்டமியை கொண்டாடினர், தெய்வீக அன்பின் ராஜ அவதாரத்தை போற்றும் வகையில் YSS சன்னியாசி ஒருவர் வழிநடத்திய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்நிகழ்ச்சி, வாசிப்பு நேரங்கள், தெய்வீக கீதமிசைத்தல், தியானம் ஆகியவை இருந்தன.

இந்த நினைவு தியானம் ஸ்ரீ கிருஷ்ணரின் ஞானம் மற்றும் தியான போதனைகளைப் பின்பற்றுவதற்கு அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்கியது, யோகேஸ்வர் அல்லது “யோகத்தின் இறைவன்” என்று போற்றப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன.

அனைத்து YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் இந்த சந்தர்ப்பத்தில் நேரில் நிகழ்ச்சிகளை நடத்தின.

ஜன்மாஷ்டமி 2024 செய்தி பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து

ஜன்மாஷ்டமியை முன்னிட்டு பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து வந்த செய்தியைப் படிக்க, தயவுசெய்து இந்த இணைப்பைப் பார்வையிடவும்:

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணனின் அமரத்துவ செய்திக்காக அவன் மீதான உங்கள் பக்தி மற்றும் நன்றியின் அடையாளமாக இந்த சந்தர்ப்பத்தில் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர